ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள பெருநிறுவனங்க ளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதன் மூலம் ஒன்றிய அரசு பணக்காரர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. இத்தகைய நடைமுறைகள் சாமானியர்கள் மீது அதிகப் படியான வரிச்சுமையைத் திணிக்கிறது. பணக்காரர் களுக்கான கடன் தள்ளுபடி என்பது மிகப்பெரிய ஊழல், அதனை நிறுத்துவதற்கான நேரம் இது.
ஒட்டுமொத்த வட இந்தியாவை விட கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் மற்றும் தெலுங் கானா ஆகிய 5 தென்மாநிலங்களில் பங்களிப்பு மிக அதிகம். கர்நாடக அரசு 100 ரூபாய் அளித்தால், ஒன்றிய அரசு 12 ரூபாய் மட்டுமே தருகிறது. இதே போல தென்மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இது மிகமோசமானது.
மோடியின் நெருங்கிய நண்பரான டிரம்ப், பிறப்பு குடியுரிமை சட்டத்தை ரத்து செய்து விட்டார். அமெரிக்காவில் இந்தியருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி அமெரிக்க குடியுரிமை இயல்பாக கிடைக்காது. டிரம்பின் இந்த நடவடிக்கையை மோடியின் பக்தர்கள் கொண்டாடுவார்களா?
உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளாவை ஆயிரக்கணக்கான கோடிகள் செலவழித்து அரசாங்கம் நடத்துகிறது. அங்கு வரும் சில துறவிகள் அரசியல் சாசனத்துக்கு எதிராக பேசுகின்றனர். இந்து ராஷ்டிரத்துக்கான சாசன வரைவை தயார் செய்கின்றனர்.
தில்லி உள்பட வட இந்தியாவின் பெரும்பா லான இடங்களில் கடுங்குளிர் வாட்டி வதைக்கி றது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள் ளாகியுள்ளனர்.
“உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோவி லுக்கு அடுத்த 15 நாள்களுக்கு வரவேண்டாம்” என கோவில் அறக்கட்டளை பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. கும்பமேளாவிற்கு வரும் பக்தர்கள் ராமர் கோவிலுக்கும் வருவதால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருவதால் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தெலுங்கானாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை திரையரங்குகளில் இரவு 11 மணிக்கு மேல் அனுமதிக்கக் கூடாது என அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதுகலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு (கியூட்) விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 1ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் ஜனவரி 30ஆம் தேதி பிரச்சாரம் மேற் கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உச்சநீதிமன்றத்தின் 75ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக செவ்வாய்க்கிழமை அன்று சிறப்பு அமர்வு நடைபெற்றது. நீதித்துறை, உச்சநீதிமன்றம் குறித்து நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் உரையாற்றினர்.
போலியான பாலியல் வழக்கில் சிக்க வைத்தது தொடர்பாக பழங்குடி யினத்தைச் சேர்ந்த துர்க்பா அளித்த புகாரின் பேரில் இன்போசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் பலராம் உள்ளிட்ட 18 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு (கர்நாடகா மாநிலம் சதாசிவா நகர் காவல் நிலையத்தில்) செய்யப்பட்டுள்ளது.