states

8 அமைப்புகளுக்கு தடை!

புதுதில்லி, செப். 28 - பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் 8 துணை அமைப்புக்களை 5 ஆண்டுகளுக்கு  தடை செய்து, ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ‘உபா’ சட்டத்தின் கீழ் நாட்டில் தடை செய்யப் பட்ட 45 அமைப்புகளில் பி.எப்.ஐ அமைப்பும் சேர்க்கப் பட்டுள்ளது; இந்த தடை உடனடியாக அமலுக்கு வரு கிறது என்று அறிவித்துள்ள ஒன்றிய அரசு,  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் இணை யதளம், முகநூல், டுவிட்டர் பக்கங்களையும் முடக்கியுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,  “பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கூட்டாளிகள் அல்லது துணை நிறுவனங்களைப் பொறுத்தவரை, அவை  ஒரு சமூக-பொரு ளாதார, கல்வி மற்றும் அரசியல் அமைப்பாக  செயல்படுகின்றன என்பது போல் தோன்றினாலும், சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மூளைச் சலவை செய்து, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் செயல்பட்டு, ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கும் திட்டங்களைக் கொண்டிருக்கின்றன. 

சஞ்சித் (கேரளா, நவம்பர் 2021), வி. ராமலிங்கம், (தமிழ்நாடு, 2019), நந்து, (கேரளா, 2021), அபிமன்யு (கேரளா) சரத் (கர்நாடகா, 2017), ஆர். ருத்ரேஷ் (கர்நாடகா, 2016), பிரவீன் பூஜாரி (கர்நாடகா, 2016), சசி குமார் (தமிழ்நாடு, 2016) மற்றும் பிரவீன் நெட் டாரு (கர்நாடகா, 2022). உள்ளிட்ட பலரின் கொலை களிலும், பல தீவிரவாதச் செயல்களிலும், பிஎப்ஐ  உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் குறிப்பிடப் பட்டுள்ள கொலைக்கு பலியானவர்களில் பெரும்பாலானோர் ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனதா  கட்சி (பிஜேபி) அல்லது பிற இந்து அமைப்பு களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டுள்ளன. நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாது காப்பு, பொது அமைதி ஆகியவற்றிற்கு எதிராக செயல்படுகின்றனர். மேலும் தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கம் (SIMI) மற்றும் ஜாமாத்-உல்-முஜாஹிதீன் பங்களா தேஷ் (JMB) போன்ற அமைப்புகளுடன் பிஎப்ஐ உறுப்பினர்கள் சிலர் இணைந்துள்ளனர்.

பிஎப்ஐ அமைப்புக்கு, இராக், சிரியாவில் உள்ள  ஐ.எஸ்.பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக் கிறது. இந்த அமைப்பினர், நாடு முழுவதும் பயங்கர வாத மற்றும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு  வருவதுடன், ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்திலும் செயல்பட்டு வருகிறார்கள். எனவே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967 பிரிவு 3ன் உட்பிரிவு 3ன் படியும் மற்றும் பிரிவு 4ன் படியும் அவர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் குஜராத்  மாநில அரசுகள், பிஎப்ஐ அமைப்பைத் தடை செய்யு மாறு ஏற்கெனவே பரிந்துரை வழங்கியிருப்ப தாகவும் ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தலைநக ரான தில்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள் ளது. குறிப்பாக தில்லி ஷாஹீன் பாக்  பகுதியில் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.