புதுதில்லி, ஜூலை 2- வேளாண் துறைக்கும், விவசாயி களுக்கும் தனது அரசின் ஆண்டுச் செலவு ரூ.6.5 லட்சம் கோடி என்றும், ஒவ்வொரு விவசாயிக்கும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.50,000 பலன் கிடைப் பது உறுதி என்றும் பிரதமர் மோடி கூறி யுள்ளார். 17-ஆவது இந்திய கூட்டுறவு மாநாட் டின் தொடக்க விழாவில் உரையாற்றிய மோடி, கொள்கைகளில் செய்த மாற் றம், கடந்த ஒன்பது ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளால் இந்தப் பலனை விவசாயிகள் பெற்று வரு கிறார்கள். கோடிக்கணக்கான சிறு விவ சாயிகள் பிரதமர் கிஷான் சம்மான் நிதி யைப் பெறுகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.2.5 லட்சம் கோடி மாற்றப்பட்டுள்ளது. இன்று, விவசாயி ஒரு மூட்டை யூரியா ரூ.270க்குக் குறைவாகப் பெறு கிறார். அதே யூரியா வங்காள தேசத் தில் ரூ.720, பாகிஸ்தானில் ரூ.800, சீனா வில் ரூ.2,100, அமெரிக்காவில் ரூ.3,000 விற்கப்படுகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், உர மானியத்திற்காக ரூ.10 லட்சம் கோடியை பாஜக அரசு செலவிட்டுள்ளது. விவசாயிகள் கணக்கிட்டால், ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் விவசாயத் துறைக்கும் விவசாயி களுக்கும் 6.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏதாவது ஒரு வகையில் அரசு ரூ. 50,000 வழங்குகிறது. விவசாயத்தில் இரசாயனங்கள் பயன்படுத்தப்படாமல் இருக்க ஒவ் வொரு மாவட்டத்திலும் ஐந்து கிரா மங்களை கூட்டுறவு சங்கங்கள் தத்தெ டுக்க வேண்டும் என்று அவர் வலி யுறுத்தினார்.