நாடு முழுவதும் மக்கள் பயன்படுத்து கிற அத்தியாவசிய உணவுப் பொருட் கள் மற்றும் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒன்றிய அரசின் மிக மோச மான நுகர்வு கொள்கைகளால் இத்தகைய விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தக்காளி வெங்காயம் உள்ளிட்ட காய்கறி களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயி கள் மிகப்பெரிய நஷ்டத்திற்கு ஆளாக்கப்பட்ட னர். கட்டுப்படியான விலை கிடைக்காததால் விளைந்த தக்காளிகளை தோட்டங்களிலேயே அழித்தனர். தக்காளி விலை உயர்வுக்கு பருவநிலை மாற் றம் ஒரு முக்கிய காரணம். சந்தையின் ஏற்ற இறக் கத்தால் விலை உயர்வின் போது உடனடியாக இந்திய அரசு தலையிட்டு நிலையை கட்டுப்படுத்த வேண்டும். அதைப்பற்றி கவலைப்படாமல் இருக் கும் ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கி றோம். ரேசனில் வழங்குக! தற்போது தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் போன்ற மக்கள் அன்றாடம் பயன் படுத்தும் உணவுப் பொருட்களின் விலை கடுமை யாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, எளிய சாதாரண குடும்பங்கள் பெரும் பாதிப்புக்கு உள் ளாகியுள்ளனர். குறிப்பாக பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் குடும்பங்கள் இத்தகைய விலை உயர்வினால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தமிழக முதல்வர் அத்தியாவசிய காய்கறி களை ரேஷன் கடைகளில் வழங்க ஏற்பாடு செய்வ தாக கூறி இருக்கிற இச்சூழலில் உடனடியாக தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளை தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளில் குறைந்த விலை யில் வழங்கிட உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து...