states

img

முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை சந்திக்க மகாயுதி கூட்டணி முடிவு

மும்பை 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்ட மாக சட்டமன்ற தேர்த லுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. செவ் வாய்க்கிழமை (அக்.22) முதல் இந்த தேர்த லுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்க உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு சரியாக இன்னும் ஒரு மாத காலமே உள்ள சூழலில் அரசியல் கட்சி கள் தேர்தல் வேலைகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பாஜக - சிவசேனா (ஷிண்டே) - தேசியவாத காங்கிரஸ் (அஜித்) ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தர வின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள தாக மகாராஷ்டிர பாஜக மேலிடம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.  ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை நிராகரிப்பு தற்போது மகாராஷ்டிர முதல்வராக இருப்பவர் ஏக்நாத் ஷிண்டே. 3 நாட்களு க்கு முன் நடைபெற்ற மகாயுதி கூட்டணி  கட்சிகளின் கூட்டத்தில், “தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்” என  ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தியுள்ளார். ஆனால் பாஜக மற்றும் அஜித் பவார்  ஏக்நாத் ஷிண்டேவை  முதல்வர் வேட்பா ளராக ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் அமித் ஷா மகாராஷ்டிராவில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் பிரதமர் மோடியின் பெயரை வைத்து தேர்தலை சந்திக்க உத்தரவிட்டுள்ளார். இதற்கு சிவசேனா (ஷிண்டே) கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக மராத்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  தேர்தலுக்குப் பின் ஏக்நாத் ஷிண்டே வை முழுமையாக ஓரம் கட்ட பாஜக திட்ட மிட்டுள்ளதால், மகாராஷ்டிராவில் முதல் வர் வேட்பாளரை அறிவிக்காமல் பாஜக கூட்டணி தேர்தலை சந்திக்கிறது என அரசியல் விமர் சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.