states

‘அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி உதவி பெறும், சுயநிதி பள்ளிகளையும் அரசு கண்காணிக்க வேண்டும்’

சென்னை மாவட்டத்தில் அசோக் நகர், சைதாப் பேட்டை அரசுப் பள்ளிக ளில் மாணவர்களுக்கான தன்னம்பிக் கை வகுப்பு  ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி என்ற அடிப்படையில் கலந்து கொண்ட மகாவிஷ்ணு என்பவரின் அடாவடித்தனமான அணுகுமுறை யையும், அறிவியலுக்கு எதிரான, சமத்துவத்திற்கு எதிரான, மனிதரை மனிதர் இழிவுபடுத்துகின்ற  அவரது கருத்துகளையும்  தமிழ்நாடு முது நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வன் மையாகக் கண்டிக்கிறது. நிகழ்ச்சியில் “மறுஜென்மம்” மற்றும் “போன பிறவியில் செய்த பாவம்” என்பது போன்ற அறிவியலுக்கு புறம்பான மூடநம்பிக்கையான பிற் போக்குத்தனமான கருத்துக்களை பள்ளி வளாகத்தில் அவர் பேசி யதையும், குறிப்பாக பெண்கள்,  மாற்றுத் திறனாளிகள், எளிய மக்கள் குறித்த அவரது கருத்துக்களையும் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டிக்கின்றது. மேலும் அவரிடம் கேள்வி எழுப்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியரை மிரட்டியுள்ளார். மேடையில் பள்ளி நிர் வாகத்தின் தலையீட்டையும் துச்சமாக அவர் பேசி உள்ளார். ஆசிரியர்களை முட்டாள்கள் போன்றும் சித்தரித்துள் ளார். அலுவலர்களைவிட ஆசிரியர்கள் பெரிய ஆட்களா என்று கேட்டு தனக்கு உயர் மட்ட ஆதரவு இருக்கிறது என்ற தோற்றத்தையும் உருவாக்கியுள்ளார். அவரின் இத்தகைய அத்து மீறல் கண்டனத்திற்குரியது.   தமிழ்நாடு முழுவதுமுள்ள ஆசிரி யர்களுக்கு பாதுகாப்பும் நம்பிக்கை யும் ஏற்படுத்தும் வகையில் அரசு உட னடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

வாய்மொழி  உத்தரவு மூலம் நிர்ப்பந்தம்

பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சி கள் நடக்க ஏற்பாடு செய்யும்போது விழிப்புணர்வுடனும் சரியாகவும் இருக்க உரிய வழிகாட்டல்களை அரசு அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசி ரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ஆனால் அவர்களையும் கடந்து இப் பிரச்சனையில் சம்பந்தப் பட்ட கல்வி நிர்வாகத்தின் உயர் மட்ட அலுவலர்களும் விசாரணைக்கும், நடவடிக்கைக்கும் உட்படுத்தப்பட வேண்டும். வாய் மொழி உத்தரவுகள் மூலம் நிர்ப்பந்தம் செலுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.  இத்தகைய நிர்ப்பந்தங்கள் இவ் வகையான நிகழ்வுகளை கல்வி வளாகத்தில்  அரங்கேற்றிடும்போது தடுக்கவும் இயலாது,  அமைதியாக சென்று விடுவோம் என்ற மனநிலை க்குஅறிவைப் புகட்டும் ஆசிரியர்களை தள்ளுகிறது என்ற யதார்த்தத்தை அரசு கவனிக்க வேண்டும். பள்ளி வளாக   நிகழ்வுகள் அரசமை ப்புச் சட்ட அடிப்படையில் மதச்சார்பற்ற முறையிலும், அறிவியல், சமத்துவ கண்ணோட்டத்துடனும் நடப்பதற்கு உறுதியான நடவடிக்கை தேவை. அரசு பள்ளியில் மட்டுமில்லை. அரசு உதவி பெறும் பள்ளி, சுயநிதி பிரிவு பள்ளிகளில்  நடைபெறும் நிகழ்வுகளை யும்  கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

போலி ஆணைகள் மூலம் நுழையும் அமைப்புகள், நபர்கள்

அரசியல்வாதிகளுடனும் அரசுட னும் நெருக்கமாக இருப்பது போன்று தோற்றத்தை ஏற்படுத்தியும் அதன் மூலமாக போலியான ஆணைகளை தயார் செய்து பள்ளி வளாகத்துக்குள் நுழையும் பல்வேறு அமைப்புகள், நபர்கள் மீது உரிய கட்டுப்பாடும் கவனமும் செலுத்திட தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். அசோக் நகர் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளைக் குறித்து கருத்தாளர் வெளிப்படுத்திய பிற்போக்கான கருத்துக்களை மறுதலித்து கேள்வி களை எழுப்பிய ஆசிரியரை மனமாரப் பாராட்டுகிறோம். மாற்றுத் திறனாளி களை இழிவு செய்தமைக்காகவும் மகா விஷ்ணு மீது வழக்குப் பதிவு செய்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கல்வி வளாகம் சாதி, சமயம், மொழி, இனம் கடந்து அறிவு சார்ந்த அறிவியல் பூர்வமான சிந்தனைகளை உருவாக்கிடும் வளாகமாக செயல் படும் வகையில் உரிய  தொடர் நடவ டிக்கைகள் எடுத்திடவும், பிற்போக்குச் சிந்தனைகளும் அமைப்புகளும் ஊடுருவுவதை தடுத்திடவும்  தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தமிழக அரசையும் பள்ளிக்கல்வித் துறையும் வலியுறுத்துகிறது.  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக  மாநில பொதுச் செயலாளர் பெ.அன்பழகன் அறிக்கை