சென்னை,ஜன.16- விண்வெளியில் இரு செயற்கைக் கோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக இஸ்ரோ அறி வித்துள்ளது. தலா 220 கிலோ எடையுள்ள இரு செயற்கைக்கோள்களை பரி சோதனை முயற்சியாக இணைக்கும் பணியை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனம் மேற்கொண்டிருந்தது. அது வெற்றிகரமாக நிறை வேற்றப்பட்டதாக இஸ்ரோ தெரி வித்துள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான், சந்திர யான்-4 திட்டங்களுக்கு டாக்கிங் முறை முக்கியமானது என்ப தால், அது வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதற்கு குடி யரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள். இஸ்ரோ சார்பில் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி அன்று ஸ்பேடேக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண் கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.இதைத்தொடர்ந்து, விண்வெளியில் 2 விண்கலன்களை இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. முதலில் இரு செயற்கை கோள்க ளுக்கு இடையிலான தூரத்தை படிப்படியாக குறைத்து இரண்டை யும் ஒன்றோடு ஒன்றாக இணைத்த னர். இதன் மூலம் விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி கண்டுள்ளது.2 விண்கலன்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை அறிந்த 4 நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளுக்கு புதிய இஸ்ரோ தலைவர் நாராயணன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்நிலையில், விண்ணில் செயற் கைக்கோள்களை இணைக்கும் பணியை வெற்றிகரமாக நிரூ பித்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரி வித்துள்ளனர். அதில், இது வரும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்றும் கூறியுள்ளனர்.