states

சாம்சங் தொழிலாளர் வேலை நிறுத்தமும் பேச்சுவார்த்தையும் தொடரும்!

சென்னை, செப். 12 - சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் நடத்திவரும் வேலைநிறுத்தப் போ ராட்டம் ஐந்தாவது நாளாக நீடித்து வருகிறது.  இந்நிலையில், வியாழக்கிழமை (செப்.12) சென்னை தலைமைச் செயல கத்தில் சாம்சங் நிறுவன அதிகாரிகள், தொழிற்சங்கத் தலைவர்கள், மாநில அரசின் துறை அதிகாரிகள் ஆகியோரு டன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தனித் தனியாக பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்கள் சார்பில் சிஐடியு முன்வைத்துள்ள கோரிக்கை கள் குறித்து மட்டுமே பேச வேண்டும் என்பதை தலைவர்கள் அ. சவுந்தர ராசன், இ. முத்துக்குமார் ஆகியோர் வலியுறுத்தினர். அதேநேரத்தில், சிஐடியு முன்வைத்திருக்கும் கோரிக் கைகள் குறித்து அதன் தலைவர்கள் மற்றும் தொழிற்சாலையில் தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்; வேண்டுமென்றால், தொழிலாளர் குழு வுடன் மட்டும் பேசுகிறோம் என்று சாம்சங் அதிகாரிகள் தரப்பில் கூறப் பட்டது. சாம்சங் அதிகாரிகளின் அடாவடித் தனத்தையும், போட்டி சங்கம் அமைத்து அதில் தொழிலாளர்களை சேரு மாறு கட்டாயப்படுத்துவதை ஒருபோ தும் ஏற்க முடியாது என்பதில் சிஐடியு தலைவர்கள் உறுதியாக இருந்தனர். மேலும், இந்தியாவின் தொழிற்சங்க உரிமை, கூட்டுபேர உரிமை, சட்டப் பூர்வமான உரிமைகளில் இருந்து ஒரு போதும் பின்வாங்க மாட்டோம் என் பதை திட்டவட்டமாக தெரிவித்தனர். அப்போது அரசுத் தரப்பில் பேசிய அமைச்சர் சி.வி. கணேசன், “முதல மைச்சர் தற்போது வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளதால் அவர் வந்த தும் பேச்சுவார்த்தை நடத்துவோம். எனவே, தற்போது வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்ள முடியுமா?” என்று தொழிற்சங்கத் தலைவர்களிடம் கேட்டார். ஆனால், சிஐடியு தலை வர்கள் தங்களது நிலைப்பாட்டில் உறுதி யாக இருந்தனர்.  “முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இத னால், தொழிலாளர்களின் போராட்டம் தொடரும். அரசுத் தரப்பில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் கலந்துகொள்வோம்” என்றும் சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ. முத்துக்குமார் தெரிவித்தார். முன்னதாக, சாம்சங் தொழிலா ளர்கள் போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு முதுபெரும் தலைவர் டி.கே. ரங்கராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான பெ. சண்முகம் ஆகியோர் பேசினர்.