states

img

திருமணத்தை ஏற்க மறுத்தது தற்கொலைக்கு தூண்டும் குற்றமாக கருத முடியாது உச்சநீதிமன்றம் கருத்து

மேற்கு வங்க மாநிலம் கொல் கத்தா அருகே இளம் பெண் ஒருவர் தனக்கு அறிமுகமான பாபு தாஸ் என்ற இளைஞரை காத லித்து வந்துள்ளார். அவர்களின் திரும ணத்திற்கு பாபு தாஸின் தாயார் எதிர் ப்பு தெரிவித்துள் ளார். தொடர்ந்து பாபு தாசும் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் விரக்தி யுற்ற இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த பெண்ணின் உறவினர் ஒருவர் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர, பாபு தாஸ், அவரது தாயார்  லட்சுமி தாஸ் ஆகியோர் குற்றவாளிக ளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி பாபு தாஸின் தாயார் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.  இதையடுத்து பாபு தாஸின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு  நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது பாதிக் கப்பட்ட இளம்பெண் குடும்பத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இளைஞரின் தாயார் திருமணத்தை ஏற்க  மறுத்ததும், அந்த பெண் குறித்து இழி வாகப் பேசியதுமே அவரது தற்கொலை முடிவிற்கு காரணம்” என சுட்டிக் காட்டி னார். ஆனால் இதனை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,”திருமணத்தை ஏற்க மறுத்தது மற்றும் அதற்கு எதிராக கருத்து தெரிவித்ததை மட்டுமே தற் கொலைக்கு தூண்டிய குற்றமாக கருத முடியாது” எனக்கூறி வழக்கை தள்ளு படி செய்து உத்தரவிட்டனர்.