states

img

பாபர் மசூதி இடிப்பு குற்றவாளி சாத்வி ரிதம்பராவுக்கு பத்மபூஷன் விருது

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு குற்ற வாளி சாத்வி ரிதம்பரா வுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் கண்டனம் குவிந்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 16ஆம் நூற்றாண் டில் முகலாய தளபதி மீர் பாகி என்ப வரால் பாபர் மசூதி கட்டப்பட்டது. நாட்டின் பிரசித்தி பெற்ற மசூதி களில் பாபர் மசூதியும் ஒன்று. ஆனால் பாபர் மசூதியை, ராமர் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதா கக் கூறி ஆர்எஸ்எஸ் - பாஜக- சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவா மதவெறிக் கும்பல் “கரசேவர்கள்” என்ற பெயரில் கூடி 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இடித்தது.  இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத் வானி, உமாபாரதி, முரளி மனோ கர் ஜோஷி, சாத்வி ரிதம்பரா, ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் நிருத்யா கோபால் தாஸ், பாஜக மூத்த தலைவர் வினய் சிங் உள்ளிட்ட 32 பேர் குற்றம் சாட்டப் பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட வர்கள் “ராமர் கோவில் இயக்கம்” என்ற பெயரில் ஒன்று கூடி, பாபர் மசூதியை இடிக்க திட்டம் வகுத்து இடித்துள்ளனர் என லிபரான் கமி ஷன் மற்றும் சிபிஐ விசாரணையில் நிரூபணமாகியது. ஆனால் மோடி பிரதமர் ஆன பின்பு 2020ஆம் ஆண்டு 32 பேரும் மசூதி இடிப்பு  வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டனர். குற்றவாளிக்கு பத்ம விருது இந்நிலையில், 2024ஆம் ஆண் டிற்கான பத்ம விருதுகள் ஜனவரி 25 அன்று அறிவிக்கப்பட்டன. அதில் 7 பேருக்கு பத்ம விபூஷன், 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ என 139 பேருக்கு பத்ம விருதுக ளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்பு தல் அளித்துள்ளார். இதில் பத்ம பூஷன் விருதுக்கு பாபர் மசூதி இடிப்பு குற்றவாளியான சாத்வி ரிதம்பராவுக்கு அறிவிக்கப் பட்டுள்ளதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனக் குரல் கிளம்பி யுள்ளது. லிபரான் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட 68 பேரில் ஒரு வராகவும், சிபிஐ விசாரணை குற் றப்பத்திரிகையின் 32 பேரில் ஒருவ ராகவும் சாத்வி ரிதம்பரா பாபர் மசூதி இடிப்பு குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் ஆவார். 

வெறுப்புப் பேச்சு குற்றவாளி

1980ஆம் ஆண்டு மிக இளம் வய திலேயே லூதியானாவில் (பஞ்சாப்) நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் கூட்டத்தில் வெறு ப்புப் பேச்சு மூலம் வகுப்புவாத அர சியலில் காலடி வைத்தவர் சாத்வி ரிதம்பரா. தொடர்ந்து அவர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தனது கொடூர வெறுப்புப் பேச்சு மூலம் வன்முறையை தூண்டி யுள்ளார்.  ஜனவரி 1991ஆம் ஆண்டில் தனது 25 வயதில் பாபர் மசூதி தொ டர்பாக ஆத்திரமூட்டும் பேச்சுக்க ளுக்காக சாத்வி ரிதம்பரா மீது தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. அதே போல பாபர் மசூதி இடிப்பில் ஈடுபட்ட பின்பு மத்தியப் பிரதேசத்தில் கன்னியாஸ்திரி கத்தி யால் குத்திக் கொல்லப்பட்ட வழக் கிலும் சாத்வி ரிதம்பரா சிக்கினார். ஆனால் இதனை மறைக்க கிறிஸ்த வர்கள் மீது வெறுப்பைக் கக்கி, மாநிலத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழல் மூலம் தனது கொலை வழக்கை திசை திருப்பியவர்.  2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒடிசா சட்டமன்றம் தாக்கப்பட்ட சம்பவத்திலும் சாத்வி ரிதம்பரா சர்ச்சையை ஏற்படுத்தும் வகை யில் செயல்பட்டார். குறிப்பாக வெறுப்புப் பேச்சை ஊக்குவிக்கும் வகையில், தனது மேடை வெறுப் புப் பேச்சுக்களின் தொகுப்பை “தி இந்து தேசியவாத இயக்கமும் இந்திய அரசியலும் (1925 முதல் 1990 வரை)” என்ற பெயரில் புத்தக மாக வெளியிட்டார்.  வன்முறையை  ஊக்குவிக்க பயிற்சி சாத்வி ரிதம்பரா “சம்வித் குரு குலம்” என்ற சைனிக் பள்ளியின் தலைவராக உள்ளார். இந்த பள்ளி ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகளுடன் தொடர்புடைய பள்ளி ஆகும். இந்த பள்ளி வெறுப்புப் பேச்சு மற்றும் இந்துத்துவா செயல்பாடுகளை ஊக்குவிக்கின்றது என்பது குறிப்பி டத்தக்கது.

மோடிக்கு மிக நெருக்கமானவர்

சாத்வி ரிதம்பரா பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் ஆவார். எந்த நேரத்திலும் பிரதமர் மோடியை அடிக்கடி நேரில் சந்திக்கும் அளவிற்கு சாத்வி ரிதம்பரா செல்வாக்கு படைத்தவர். சாத்வி ரிதம்பரா வரு கிறார் என்றால் மற்ற வேலைகளை புறந்தள்ளிவிட்டு பிரதமர் மோடி அவருக்கு நேரமும் வழங்கி விடுவாராம். இதன்காரணமாகவே சாத்வி ரிதம்பரா பத்மபூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம் என செய்திகள் வெளியாகின்றன.