states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பிரியங்கா காந்திக்கு எதிராக பேசிய ரமேஷ் பிதுரி, தவறான நடத்தை மற்றும் மலிவான மனிதனின் மனநிலையை மட்டும் பிரதிபலிக்கவில்லை. அவருடைய உரிமையாளர்களின் யதார்த்தத்தை வெளிக்காட்டுகிறது. பாஜகவின் இத்தகைய கீழ்த்தரமான தலைவர்களின் மூலம் ஆர்எஸ்எஸ் மதிப்பினை நீங்கள் கண்டுகொள்ளலாம்.

பிரியங்கா காந்திக்கு எதிரான பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியின் பேச்சை கேளுங்கள் மக்களே. இதுவே பெண்களுக்கு பாஜக கொடுக்கும் மரியாதை. தில்லி பெண்களின் மரியாதை இதுபோன்றவர்களின் கையில் பாதுகாப்பாக இருக்குமா? எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ரமேஷ் பிதுரியின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பிரியங்கா காந்திக்கு எதிரான பேச்சு மிகவும் தவறானவை. பாஜக தலைவர் ரமேஷ் பிதுரி கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். இது சாதாரணமாக கடந்து செல்லும் விஷயம் அல்ல. 

உத்தரப்பிரதேச பாஜகவுக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் மாநிலத்தில் பொதுப்பணிகள் புறக்கணிக்கப்படுகின்றன. பொதுநலன்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பசுவதை பெயரில் பணம் பறிக்கும் பாஜக அரசின் ஊழல் மிக மோசமானது.

குஜராத் மாநிலம் போர்பந்தரில் இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான இலகு ரக ஹெலிகாப்டரான ‘துருவ்’ விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். வழக்கமான பயிற்சியின் போது கீழே விழுந்து விபத்து நடந்துள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நிகழ்த்தப் பட்ட என்கவுண்டரில் 4 நக்சலைட்டுகள் பாது காப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலில் காவலர் ஒருவரும் உயிரிழந்தார்.