states

img

மாணவர் சங்கத்தினரை கைது செய்த காவல்துறை!

திருநெல்வேலி, அக். 25 - திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டி கேட் உறுப்பினராக, ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி-யைச் சேர்ந்த சவீதா ராஜேஷ் என்பவரை நியமித்து, ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார். இது மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் தமது உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்; கல்வியை மதவெறி மயமாக்கும் வேலையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI) வியாழ னன்று பல்கலைக்கழக வாயில் முன்பு போராட்டம் நடத்தினர். மேலும், மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழக 31-ஆவது பட்ட மளிப்பு விழாவையொட்டி, ஆளுநர்  ஆர்.என். ரவி, வெள்ளிக்கிழமை யன்று தூத்துக்குடி விமான நிலையத் திலிருந்து நெல்லைக்கு வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், சிண்டிகேட் உறுப்பினர் நியமனத்தில் நேரடியாகவும் ஆளு நருக்கு தங்களின் எதிர்ப்பைத் தெரி விக்கும் மாணவர் சங்கத்தினர் போராட்டம் அறிவித்திருந்தனர். அதன்படி வெள்ளியன்று வண்ணாரப்பேட்டை பகுதியில் ஆளு நரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய வாரே இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ. சம்சீர் அகமது, மாவட்டத் தலைவர் சஞ்சய், மாவட்டச் செயலாளர் சைலேஷ் அருள்ராஜ் உட்பட மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் அனிதா தலைமையில் நூற்றுக் கணக்கில் குவிக்கப்பட்ட போலீசார், மாணவர் சங்கத்தினரைக் கைது செய்தனர்.