states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இன்று ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

சென்னை, அக். 25 - தெற்கு கேரள கடற் கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு கீழ டுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, சனிக் கிழமை (அக்.26) அன்று தேனி, தென்காசி, திருநெல் வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவ கங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குடிநீர்-கழிவு நீரகற்று வாரிய தொழிலாளர்களுக்கு ரூ.3600 போனஸ் சிஐடியு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சென்னை, அக். 25 - குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசாக 3600 ரூபாய் வழங்கப்பட உள்ளது. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தொழி லாளர் சங்கம் (சிஐடியு) தொடர் போராட்டம் நடத்தி 2023 ஆம்ஆண்டு முதன் முறையாக போனசை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுத்தது. இதன்தொடர்ச்சியாக 2024ஆம் ஆண்டு போனஸ் வழங்க தொழிற் தாவா எழுப்பியது.இதையடுத்து தொழி லாளர் உதவி ஆணையர் சு.பா.சாந்திமுன்பு சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிர்வாகம் சார்பில் தொழில் தொடர்பு மேலாளர் கே.ரமேஷ்குமார், கணக்கு அதி காரி குமுதவள்ளி, தொழிற்சங்கம் தரப்பில் சங்கத்தின் தலைவர் க.பீம்ராவ், பொதுச்செய லாளர் எம்.பழனி,துணைத் தலைவர் சி.சத்ய நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பேச்சுவார்த்தையில், 2 ஆயிரத்து 850  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒப்பந்த தாரர் வாயிலாக போனஸ் வழங்கப்படும். கடந்த ஆண்டைவிட கூடுதலாக 600 ரூபாய் போனஸ் உயர்த்தி வழங்கப்படும்.தீபாவளிக்கு முன்பு தொழிலாளர்களின் வங்கி கணக்கில் போனஸ் வரவு வைக்க ப் ப்படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தானது.மேலும், மாதந்தோறும் 5 ஆம் தேதி வழங்கப்படும் சம்பளத்தை, தீபாவளியை முன்னிட்டு பண்டிகைக்கு முன்னதாகவே வழங்க நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து நமது செய்தியாளரிடம் பேசிய க.பீம்ராவ், “வாரிய வரலாற்றில் முதன்முறையாக கடந்தாண்டு 3 ஆயிரம் ரூபாய் போனஸ் பெற்றோம். தொழிலாளர்களின் ஒற்றுமையான தொடர் போராட்டத்தை அடுத்து, இந்த ஆண்டு 600 ரூபாய் உயர்த்தி 3600 ரூபாய் பெற்றுள்ளோம்” என்று தெரிவித்தார்.

 விசாரணைக்கு ஆஜராகாத  பாஜக தலைவர்

சென்னை,அக்.25- மக்களவைத் தேர் தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் நயி னார் நாகேந்திரன், கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர், முரளி ஆகியோரிடம் விசார ணை நடத்தி வருகின்றனர்.  இதில் பாஜக புதுச் சேரி தலைவர் செல்வ கணபதியை விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி னர். இதற்கு பதில் எழுதி யிருக்கும் செல்வகணபதி, “முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருப்பதால் விசாரணைக்கு நேரில்ஆஜராக இயலாது. விசாரணைக்கு ஆஜராக மூன்று மாதம் கால அவ காசம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

முன்னாள் அமைச்சர்  கைது

விழுப்புரம்,அக்.25- அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடந்த மூன்றுஆண்டுகளில் 21 புகார்கள் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வெள்ளிக்கிழமை (அக்.25)  விழுப்புரத்தில் திடீரென்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.  இதையடுத்து, அவரிடம் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், அவர் போக்கு வரத்திற்கு இடையூறு செய்யும் நோக்கத்தில் போராட்டத்தை தொடர்ந் தார். இதையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.  

கழன்று ஓடிய  ரயில் இன்ஜின் 

வேலூர்,அக்.25-  ‘விவேக் எக்ஸ்பிரஸ்’ ரயில் வெள்ளிக்கிழமை (அக்.25) காலை சென்னை யில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரி நோக்கிச்  சென்றது.  9 மணிக்கு வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்து ள்ள முகுந்தராயபுரம்-திரு வலம்ரயில் நிலையங் களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயில் இன்ஜின் பெட்டி தனியாக கழன்றது. இன்ஜினையும் ரயில் பெட்டி களையும் இணைக்கும் கப்ளிங் கழன்றுசென்றதால் ரயில் நின்றது.  இதையடுத்து, அந்த மார்க்கத்தில் செல்லும்  இதர ரயில்கள் ஆங்காங்கே  நடுவழியில் நிறுத்தப்பட்டன.  இதுகுறித்து, உடனடி யாக ரயில்வே போலீ சாருக்கு தகவல்கொடுக்கப் பட்ட நிலையில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீ சார் அங்கு வந்து ஆய்வு நடத்தினர். பிறகு, மாற்று இன்ஜின் வர வழைக்கப்பட்டு பெட்டி களோடு இணைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது.