லண்டன் புறப்பட்டுச் சென்றார் முர்மு!
பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார். அதனைத் தொடர்ந்து அவருடைய உடல் ஸ்காட்லாந்தின் பால்மரால் அரண்மனையில் இருந்து எடுத்துவரப்பட்டு, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையிலும், பின்னர், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் அடங்கிய வெஸ்ட்மினிஸ்டர் வளாகத்திலும் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. செப்டம்பர் 19-ஆம் தேதி இறுதி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். அந்த வகையில், இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறார். இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அவர் சனிக்கிழமையன்று லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
நமீபியா சிறுத்தைகளை திறந்து விட்ட மோடி!
இந்தியாவை அக்பர் ஆட்சி செய்தபோது 1000- க்கும் மேற்பட்ட சீட்டா (Cheetah) வகை சிறுத்தை கள் இருந்ததாக கூறப்பட்டது. அதன்பிறகு கொஞ்சம், கொஞ்சமாக அழியத் துவங்கியது. 1948-ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்த கடைசி சீட்டா வகை சிறுத்தையும் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆப்பிரிக்கா நாடான நமீபியாவில் இருந்து 8 சீட்டா வகை சிறுத்தைகள் இந்தியாவுக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டன. இந்த சிறுத்தைகளை மத்தியப் பிரதேசம் குனோ தேசிய பூங்காவில் சனிக்கிழமையன்று பிரதமர் மோடி கூண்டிலிருந்து திறந்து விட்டார். பின்னர் அதனை தானே கேமிராவில் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
மோடி பிறந்த நாளே; வேலையின்மை தினம்!
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை, காங்கிரஸ் இளைஞரணியினர் நாடு தழுவிய வேலைவாய்ப்பின்மை தினமாக கடைப்பிடித்தனர். கறுப்புச் சட்டை அணிந்து கையில் பதாகைகளை ஏந்தி இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் முன்பு பலர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். “இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது குறித்து பிரதமருக்கு பெரிதாக கவலை இல்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா-விற்கு வேலைவாய்ப்பு கொடுப்பதுதான் பிரதமருக்கு முக்கியமாக உள்ளது” என்று இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீநிவாஸ் சாடியுள்ளார்.
ஆம் ஆத்மியை உடைக்க ஆபரேசன் தாமரை
“முதலில் அவர்கள் (பாஜக அரசு) சத்யேந்திர ஜெயினை கைது செய்தனர், ஆனால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் எந்த ஆதாரமும் இல்லை. அதன்பின், என் வீட்டில் ரெய்டு நடத்தி னார்கள். எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் கைலாஷ் கெலாட் மீது போலி விசாரணை தொடங்கி யது. இப்போது அமானதுல்லா கான் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் ஒவ்வொரு தலைவரையும் உடைக்க ஆபரேஷன் தாமரை நடந்து கொண்டிருக்கிறது” என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.
கலை, அறிவியலிலும் புதிய பாடத் திட்டம்: அமைச்சர் பொன்முடி
கிருஷ்ணகிரி, செப். 17- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டணத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: நீட் வரக் கூடாது என்பதற்காக முதல்வர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. பொறியியல் கல்லூரியில் மாற்றம் கொண்டு வந்து உள்ளோம். நான் முதல்வன் திட்டம் மூலம் கலை அறிவியல் படிப்பிலும் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும். குறிப்பாக மாணவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் உலகைப் பற்றியும், பன்னாட்டு அறிவியல் பற்றியும் பாடத்திட்டம் கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காது, வாய் பேச முடியாத மாணவர்களுக்கு புதிய படிப்பு அறிமுகம்
சென்னை, செப்.17- சென்னை மாநில கல்லூரியில் செவித்திறன் குறையுடைய மாற்று திறனாளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் எம்.காம் (எச்ஐ) முதுகலை பட்டப்படிப்பு தொடங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விருப்ப முள்ள செவித்திறன் மற்றும் வாய் பேசாமை குறையுடைய மாற்றுத் திறனாளி மாணவர்கள் வருகிற 23 ஆம் தேதி மாநில கல்லூரி அலுவலகத்தை அணுகி விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். முழுமை செய்யப்பட்ட படிவத்தை 23 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரி வளாகத்தில் ஒப்படைக்க வேண்டும். நேரில் வர இயலாத மாற்றுத் திறனாளி மாணவர்கள் வலைதள இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை நேரிலோ அல்லது தபால் வழியிலோ அளிக்க இயலாதவர்கள் பி.டி.எப் வடிவத்தில் bursar.presidency5@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு என்று கல்லூரி முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சுற்றுலாப் பயணி பலி
தூத்துக்குடி, செப்.17- கேரள மாநிலத்தில் இருந்த இராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த பேருந்தை தேவளம் என்ற பகுதியைச் சேர்ந்த முகம்மது மகன் மல்கின் அபு பக்கர் (52) என்பவர் ஓட்டி வந்தார். பேருந்தில் 52 பயணிகள் இருந்துள்ளனர். இந்த பேருந்து சனிக்கிழமையன்று அதி காலை தூத்துக்குடி அருகே கிழக்கு கடற்சரை சாலையில் வந்து கொண்டி ருந்தது. அப்போது சாலையில் இருந்த வேகத்தடையை கடக்க முயன்றபோது, படியில் அமர்ந்து பயணம் செய்து கொண் டிருந்த ஷாஜஹான் (48) என்பவர், பேருந்திலிருந்து தவறி சாலையில் விழுந்தார். இதில் பேருந்து அவர் மீது ஏறி இறங்கியதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். இதுகுறித்து குளத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
சில்லரை விற்பனைத் துறையில் 2 மடங்கு வளர்ச்சி கண்ட சீனா!
கொரோனா தொற்றுக் கட்டுப்பாடுகளால் சீனாவின் பொருளா தாரம் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளானது. குறிப்பாக, கொரோனா மூன்றாம் அலைக்கு பிறகும் ஷென்சென் உள்பட சீனாவின் நகரங்கள் சிலவற்றில் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. வீட்டுமனை, வீடுகள், தொழிற்சாலை உற்பத்தி ஆகியவை சீனப் பொருளாதார நிலைத்தன்மைக்கு உதவி செய்துள்ளன என்றாலும், கணிக்கப்பட்ட பொருளாதார வேகத்தை சீனா எட்டவில்லை. மந்தமான நிலையிலேயே பயணிக்கிறது. நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் பொருளாதார வளர்ச்சியை 5.5 சதவிகிதம் என சீனா கணித்திருந்தது. தற்போது 2.5 சதவிகிதம் என்ற அளவிலேயே வளர்ச்சி இருந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு 8.1 சதவிகி தமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, 3 சதவிகிதம் என்ற மோசமான பாதிப்பைச் சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்ற னர்.இதனிடையே, சீனாவின் முக்கிய பொருளாதார வளர்ச்சிக் கருவியான, சில்லரை விற்பனைத் துறையில், ஆகஸ்ட் மாதத்தில் சீனா 5.4 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கு 3.3 சதவிகிதம் என்ற வளர்ச்சிக் கணிப்பையே சீனா வெளியிட்டிருந்தது. சுமார் 2 சதவிகிதம் கூடுதல் வளர்ச்சி பெற்றுள்ளது. அத்துடன், ஜூலை மாதத்தை விட இரட்டிப்பு வளர்ச்சி கண்டுள்ளது. இதேபோல தொழிற்சாலை உற்பத்தியும் ஜூலை மாதத்தில் 3.8 சதவிகிதத்தில் இருந்து 4.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. வீட்டுமனை தொழில் 5.7 சதவிகிதத்தில் இருந்து 5.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.