states

img

அசாம் ரைபிள்ஸ் ராணுவ நிலைகளில் மின்சாரத்தை துண்டித்த மிசோரம் அரசு

ஐஸ்வால் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் ஜோ ராம் மக்கள் இயக்கம் ஆட்சிசெய்து வருகிறது. முதல்வ ராக லால்துஹோமா உள்ளார். இந்நிலையில், மிசோரம் மின்துறை அமைச்சராக இருக்கும் ரோடிங்லி யானா கடந்தவியாழக்கிழமை  (அக்.17)தலைநகர் ஐஸ்வா லின் சோகாவ்சாங் அருகே நெடுஞ்சாலையில் தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது பாது காப்புப் பணியில் இருந்த அசாம் ரைபிள்ஸ் ராணுவத்தினர் அமைச்சர்  ரோடிங்லியானாவின் வாகனம் மற்றும் கான்வாய் வாகனங்களை மறித்து, “ஆயுதக் கடத்தல் தொடர் பாக வாகனத்தை சோதனை செய்ய  வேண்டும்” எனக் கூறியுள்ளனர். ஆனால் கான்வாய் பாதுகாப்புப் பணி யாளர்கள்” இது அமைச்சர் வாகனம். சோதனை இட அனுமதிக்க மாட் டோம்” எனக் கூறியுள்ளனர். 

தள்ளுமுள்ளு

ஆனால் அசாம் ரைபிள்ஸ் ராணு வத்தினர், “அமைச்சர் வாகனம் என் றெல்லாம் பார்க்க முடியாது. கண்டிப்பாக சோதனை செய்வோம்” என கூறியுள்ளனர். இதனால் அமைச்சரின் ஊழியர்கள் மற்றும் கான்வாய் படையினருக்கும் - அசாம் ரைபிள்ஸ் ராணுவத்தினருக்கும் தள்ளு முள்ளுவுடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்குப் பின் மிசோரம் மின்துறை அமைச்சர் சோதனைக்கு ஒத்துழைத்து சம்பவ இடத்தை விட்டு சென்றுவிட்டார். 

மின்சாரம் துண்டிப்பு

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ரோடிங்லியா னா வியாழன் மாலை முதல் வெள்ளி அதிகாலை வரை 7 மணி  நேரம் அசாம் ரைபிள்ஸ் ராணுவ நிலைகளில் மின்சாரத்தை துண்டித் தார். அதன்பிறகு அசாம் ரைபிள்ஸ் ராணுவ உயரதிகாரிகள் முதல்வர் லால்துஹோமாவை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்து ரைத்தனர். முதல்வர் லால்துஹோமா வின் உத்தரவுக்குப் பின் அசாம் ரைபிள்ஸ் ராணுவ நிலைகளில் மின்சாரம் சீரானது. மியான்மருடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாநிலத்தின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாக அசாம் ரைபிள்ஸ் ராணுவம் முதல்வரிடம் அறிக்கை யில் விளக்கம் தெரிவித்துள்ளது.  இந்த சம்பவம் நிகழ்ந்து 3 நாட்கள் ஆனாலும், அசாம் ரைபிள்ஸ் வெளி யிட்ட அறிக்கைக்கு பின்னரே ஞாயி றன்று இரவு செய்தியாக கசிந்துள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.