நகைச்சுவை என்ற பெயரில் வரம்பை மீறும் எந்த ஒரு தவறான கருத்தையும் ஏற்க முடியாது. உங்களுக்கு ஒரு தளம் கிடைக்கிறது என்றால் நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம் என அர்த்தமல்ல. நாம் எந்த நிலைக்குச் செல்கிறோம்?
தில்லி தேர்தலில் பாஜக வெற்றி நவீனபாசிச போக்குகளுக்கு எதிரான போராட்டத்திற்கு பெரும் பின்னடைவாகும். சோகம் என்னவென்றால், தில்லியில் உள்ள எந்த முக்கிய எதிர்க்கட்சிகளும் சுயவிமர்சன சுயபரிசோதனை செய்ய முன்வரவில்லை.
கும்பமேளாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பிரயாக்ராஜில் நிலைமையைக் கட்டுப்படுத்தும் பொறுப்புள்ள எந்த அமைச்சரோ அல்லது நபரோ காணப்படவில்லை. கும்பமேளாவைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் யோகி அரசு முழுமையான தோல்வியை அடைந்துள்ளது.
மணிப்பூர் முதலமைச்சர் பைரேன் சிங்கின் ராஜி னாமா வெகு நாட்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது. மணிப்பூரில் கடந்த 1.5 ஆண்டுகளாக வன்முறை தொடர்கிறது. 250க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் மற்றும் ஆயி ரக்கணக்கானோர் வீடற்றவர்களாகிவிட்டனர். இந்த வன்முறைக்கு இதுவரையிலும் முடிவு எட்டப்படவில்லை.