குஜராத் மாநிலம் சூரத் நகரில் இந்து பெண் ஒருவர் தனது வீட்டை முஸ்லிம் பெண்ணுக்கு விற்றதைத் தொடர்ந்து குஜராத் மாநில அரசு அதிகா ரிகள் அவ்வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர். இந்து சொத்து விற்பனையாளர் சங்க உறுப்பினர்கள் இந்த விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சூரத் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. பாஜக ஆளும் குஜராத்தில் “தொந்த ரவுகள் பகுதி சட்டம்” ( the Disturbed Areas Act) அமலில் உள்ளது. இந்த சட்டம் இஸ்லாமியர்களின் பொருளா தாரச் சுதந்திரத்தை முடக்க கொண்டு வரப்பட்டது. அதாவது இந்து ஒருவர் இஸ்லாமியர் ஒருவருக்கு வீடு விற்பனை செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக அரசாங்கத்தின் (மாவட்ட ஆட்சியரின்) அனுமதியை பெறவேண்டும். இஸ்லாமியர்களின் கடைகளை புறக் கணியுங்கள் என்ற கோசத்தை முன் வைத்து அவர்கள் மீது பொருளாதார ரீதியாக இந்துத்துவா கும்பல்கள் நடத்தி வரும் தாக்குதல் திட்டத்தின் சட்டவடிவ மாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த வீடு விற்பனை, தொந்தரவுகள் பகுதி சட்ட பிரிவுகள் 5(a) மற்றும் 5(b) ஆகியவற்றை மீறியுள்ளது என இந்துத்து வா கும்பல்கள் கூறி வருகின்றன. பாஜக சொல்லும் குஜராத் மாடல் இஸ்லாமியர்களை தொடர்ந்து பொருளா தார ரீதியாக புறக்கணித்து ஒடுக்குவது தான் என இந்த செயலுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.