பாஜக ஆளும் ஹரியானாவில் பயங்கரம் போதைப்பொருள் கும்பலால் மாணவர் படுகொலை
பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான ஹரியானாவின் பரீ தாபாத்தில் போதைப் பொருள் கும்பலால் பள்ளி மாணவன் படு கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந் துள்ளது. பரீதாபாத்தின் பைபாஸ் சாலை நகரைச் சேர்ந்த அன்ஷுல் என்ற 11ஆம் வகுப்பு மாணவன், அதே பகுதியில் உள்ள சந்தைக்கு சென்றுள்ளார். அப்போது ஹிமான்ஷு மாத்தூர் என் பவரின் கூட்டாளிகள் (6க்கும் மேற்பட் டோர்) ஆயுதங்களால் அன்ஷுலை கடு மையாக தாக்கியுள்ளனர். 14 முறை உட லில் குத்தியுள்ளனர். இதனால் ரத்த வெள் ளத்தில் சரிந்த அன்ஷுலை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஹிமான்ஷு மாத்தூர் மற்றும் அவ ரது கூட்டாளிகள் பரீதாபாத் பகுதியின் முக்கிய போதைப் பொருள் கடத்தல் கும்பல் ஆவர். இந்த கும்பல் பரீதாபாத் பகுதி பெண்கள், சிறுமிகளிடம் தவறாக நடந்து கொள்வதும் வழக்கம். பெண்கள் விவகாரம் தொடர்பாக சில நாட்களுக்கு முன் அன்ஷுல் போதைப்பொருள் கும்ப லுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு பழிவாங்கவே அன்ஷுலை போதைப் பொருள் கும்பல் படுகொலை செய்துள் ளது. இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.
சிறுநீர் குடிக்க வைத்து தாக்குதல் உ.பி.யில் தலித் சிறுவன் தற்கொலை
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு சிறுபான்மை, தலித் மக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதி கரித்து வருகிறது. இத்தகைய சூழலில் பாஸ்தி மாவட்டத்தில் 17 வயது தலித் சிறுவன் பிறந்தநாள் விழாவின் போது கொடூரமான தாக்குதலுக்கும், அவமா னத்துக்கும் ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பொழுது 4 பேர் கொண்ட கும்பல் சிறு வனை அடித்து துன்புறுத்தி, சிறுநீரைக் குடிக்க வைத்துள்ளது. மேலும் இந்த சம்பவங்களை வீடியோ எடுத்து மிரட்டி யுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தால் மனமுடைந்த சிறுவன் திங்கள்கிழமை அன்று தனது மாமா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வினேஷ் போகத் எங்கே?
விளையாட்டாக இருந்தாலும் சரி; பெண்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் முதல் ஆளாக இருப்பேன் என்று கூறி எம்எல்ஏ (ஹரியானா சட்டமன்ற தேர்தல் - காங்கிரஸ் சார்பில்) ஆனார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். ஆனால் மனு பாக்கர் விவகாரத்தில் வினேஷ் போகத் அமைதியாக இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் மனு பாக்கரும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற நிலையில், அவருக்கு ஆதரவாக வினேஷ் போகத் குரல் கொடுக்காமல் இருப்பது ஆச்சரியமாகவுள்ளது.
பழனி கோவில் மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் துவக்கம்
சென்னை,டிச.26- பழனி முருகன் கோவில் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயில் கட்டுப்பாட்டின் கீழ் ஆண்கள் கல்லூரி, பெண்கள் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பள்ளிகள் என 6 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களின் நலன்கருதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாணவர்களுக்கு மதியம் உணவு வழங்கும் திட்டமும் வெள்ளிக்கிழமை (டிச.26) முதல் துவக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 5,775 மாணவர்கள் பயனடைவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மதிய உணவுத் திட்டமும் துவக்கப்பட்டுள்ளது மாணவ-மாணவிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
பொங்கல் இலவச வேட்டி, சேலைகளை ஜன.10-க்குள் அனுப்ப உத்தரவு
சென்னை,டிச.26- பொங்கல் இலவச வேட்டி, சேலைகளை ஜனவரி 10ஆம் தேதிக்குள் ரேசன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று கைத்தறித்துறை உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக 2.50 லட்சம் நெசவாளர்களிடமிருந்து பெறப்பட்ட இலவச வேட்டி, சேலைகளை கிடங்கு மற்றும் ரேசன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 2025 பொங்கல் பண்டிகைக்கு 1 கோடியே 77 லட்சம் சேலைகளும், அதேபோல ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சம் வேட்டிகளும் வழங்கப்பட உள்ளன. இலவச வேட்டி, சேலைகளை ஜனவரி 10ஆம் தேதிக்குள் ரேசன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறிதுறை அறிவுறுத்தியுள்ளது. இலவச வேட்டி, சேலை திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு நெசவாளர்களுக்கு முன் பணம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடும் எதிர்ப்பு அமித் ஷா வருகை திடீர் ஒத்திவைப்பு
சென்னை, டிச. 26 - ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டிசம்பர் 27, 28 ஆகிய 2 நாட்கள் தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மறுபுறத்தில், டாக்டர் அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவே தமிழகம் வருவதை ஏற்க முடியாது; அவ்வாறு அமித் ஷா தமிழகம் வரும்போது, அவருக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்திருந்தன. இந்நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், தமிழகம் வரவிருந்த அமித் ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சுனாமி கோரத்தாண்டவத்தின் 20 ஆவது ஆண்டு நினைவு தினம்
சென்னை,டிச.26- தமிழகத்தில் 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியால் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். காவிரி டெல்டாவின் கடைக்கோடி மாவட்டமான நாகையில் மட்டுமே 6 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் இறந்தனர். சுனாமி பேரலையில் உயிர் தப்பிய பலரும் தங்களது குடும்பத்தை இழந்து நிர்க்கதியாகி நின்றனர். சுனாமி கோரத்தாண்டவத்தின் 20 ஆவது ஆண்டு நினைவு தினமான டிசம்பர் 26 அன்று தமிழ்நாடு முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரை அனைத்து கடற்கரை கிராமங்களிலும் மீனவர்கள் மற்றும் சுனாமியால் தங்களது உறவுகளை இழந்தவர்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். மேலும் பல பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் சுனாமி தினத்தை அனுசரித்தனர்.
டைடல் பூங்கா : அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பம்
மதுரை.டிச.26- மதுரை மற்றும் திருச்சி யில் டைடல் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனு மதி கோரி தமிழ்நாடு அர சிடம் விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி, மதுரை, திருச்சி மாவட்டங்களில் டைடல் பார்க் அமைக்கும் நட வடிக்கையில் தற்போது அரசு இறங்கி உள்ளது. இந்த இரு டைடல் பூங்காக்கள் மூலம் 10,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அறி விக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மதுரையில் 40,000 சதுர அடி பரப்பள வில், ரூ.289 கோடியில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தரை மற்றும் 12 தளங்களுடன் டைடல் பூங்கா அமைக்கப் பட உள்ளது. திருச்சியில் 57,000 சதுர அடி பரப்பளவில், ரூ. 415 கோடியில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தரை மற்றும் 6 தளங்களுடன் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்காவுக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசிடம் விண்ணப்பிக்க ப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கிடைத்தவுடன் இந்த பணி கள் அனைத்தும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்டைத்தடுப்புக்காவலர் பணியை தனியாருக்கு தாரைவார்ப்பதை எதிர்த்து போராட்டம்
மலைவாழ் மக்கள் சங்கம் அறிவிப்பு
சென்னை,டிச.26- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு தலைமையில் தாம்பரத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் இரா.சரவணன், மாநில பொருளாளர் ஏ.பொன்னுசாமி உட்பட அனைத்து மாநிலக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டில் மலையோர பகுதிகளில், வனப்பகுதி அடர்த்தியான மாவட்டங்களில் வேட்டை தடுப்பு காவலர்களாக இதுவரை ஆதிவாசி/பழங்குடியினர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டு வந்தது. சமீபத்தில் வனத்துறையின் சார்பில் வேட்டை தடுப்பு காவலர் பணிக்கு வெளிமுகமை (அவுட்சோர்சிங் ஏஜெண்ட்) என்று முடிவு செய்து அறிவித்துள்ளது பழங்குடி மக்களுக்கு எதிரானதாக அமையும். இதர சமூக வெளியாட்களை இத்தகைய வேட்டை தடுப்பு காவலில் பணியில் சேர்ப்பது என்பது, வனத்தையும், வனவிலங்குகளை வேட்டையாடுவதை தடுப்பதற்கு பதிலாக வேட்டையாடுபவர்களுக்கு உதவியாகவே அமைத்திடும். எனவே, தமிழ்நாடு அரசும், தமிழக வனத்துறையும், வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பழங்குடியினத்தவர்களை மட்டுமே தேர்வு செய்திட ஏற்கனவே இருந்த அதே நடைமுறையே தொடர வேண்டும். தனியாருக்கு தாரைவார்க்கும் உத்தரவினை வனத்துறை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் டிசம்பர் 31 அன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் தி கே.டி.வி என்ற யூடியூப் சேனலில் கார்த்திக்பிள்ளை என்பவர் குறவன் இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் இத்தகைய சம்பவங்களை செய்வார்கள் என்று இழிவுபடுத்தி பேசியுள்ளார். தமிழக அரசு ஒட்டுமொத்த குறவன் இனத்தை இழிவுபடுத்தி குற்றச்செயல்களில் தொடர்புபடுத்தி பேசிய கார்த்திக் என்பவரை டனடியாக கைது செய்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். திகேடிவி யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும். தளி பேரூராட்சி துணைத்தலைவரை தாக்கியவரை கைது செய்திடுக! தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், தளி பேரூராட்சி துணைத்தலைவருமான கோ.செல்வத்தின் மீது தளி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளேயே சாதியின் பெயரைச் சொல்லி திட்டி கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கட்சியின் ஆதிக்க சமூகத்தைச் சார்ந்தவருமான சின்னு (எ) கருணாகரன் என்பவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும்.