3 ஆண்டுகளுக்கு முன்னரே பட்டப்படிப்பை முடிக்கலாம் : யுஜிசி
சென்னை,நவ.15- மாணவர்கள் விரும்பினால் 4 ஆண்டு கால அல்லது 3 ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஓராண்டு அல்லது 6 மாதங்களுக்கு முன்னரே படித்து முடித்துக் கொள்ளலாம் என யுஜிசி தெரிவித்துள்ளது. யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு சார்பில், தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தன்னாட்சி கல்லூரிகளுக்கான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.கூட்டத்தில் படிப்பை முடிக்க ஆகும் கால அளவு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. யுஜிசி கூட்டத்தில், மாணவர்கள் 3 ஆண்டு இளங்கலை அல்லது 4 ஆண்டு தொழிற் பட்டப் படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறைக்கு ஒப்புதல் பெறப்பட்டது. அதேபோல் படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள் கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் விரும்பினால் 4 ஆண்டு கால அல்லது 3 ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஓராண்டு அல்லது 6 மாதங்களுக்கு முன்னர் படித்து முடித்துவிடலாம். அதேபோல் படிப்பில் சற்று பின்தங்கிய மாணவர்கள், வழக்கமாக ஆகும் கால அளவோடு கூடுதலாக 6 மாதங்கள் அல்லது ஓராண்டு எடுத்துக்கொள்ளலாம். இந்த புதிய முறை வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவால் வலுவான கூட்டணியை அமைக்க முடியாது : அமைச்சர் எஸ்.ரகுபதி
புதுக்கோட்டை, நவ.15 - கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் (2024) வலுவான கூட்டணியை அமைக்க முடியாத அதிமுகவால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) வலுவான கூட்டணியை அமைக்க முடியாது என்று மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார். புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டியில், திமுகவினர் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீண் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகிறார். அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு வரும்போது தெரியவரும். திமுகவினர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் (2024) வலுவான கூட்டணியை அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் அமைக்க முடியவில்லை. இப்போதும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் (2026) அவரால் வலுவான கூட்டணியை அமைக்க முடியாது. அதற்கான வாய்ப்புகள் கிடையாது. எல்லோருமே முதல்வர் கனவில்தான் வருகிறார்கள். மீண்டும் மக்கள் மு.க.ஸ்டாலினைத்தான் முதல்வராகத் தேர்வு செய்வார்கள். வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறை நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, ஆதாரங்கள் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதை உச்ச, உயர் நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ளன. அதிமுக, சீமான் போன்றோரை நடிகர் விஜய் ஒருங்கிணைப்பதற்கான பணிகளை செய்வதாகக் கேட்கிறீர்கள். அது போன்றெல்லாம் நடக்கும் போது பார்க்கலாம். சர்வாதிகாரியாகத்தான் செயல்படுவேன் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் சர்வாதிகாரத்துக்கு எப்போதுமே இடம் தரமாட்டார்கள் என்று தெரிவித்தார்.
நவ.21 வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, நவ.15- தமிழகத்தில் வருகிற 21 ஆம் தேதி வரை, அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மித மான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதி களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு கிறது. இதன் காரணமாக, நவம்பர் 16 , 17 ஆகிய தேதி களில், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவம்பர் 18 முதல் 21 ஆம் தேதி வரையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புது வை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிண்டி மருத்துவமனையில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
சென்னை,நவ.15- சென்னை கிண்டி அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவ மனையில் மருத்துவர் கத்தி யால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக. மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் மருத்துவமனையில் நவம்பர் 15 அன்று நேரில் விசாரணை நடத்தினார். மருத்துவமனை இயக்கு னர் பார்த்த சாரதியை சந்தித்தும் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் கண்ணதாசன் செய்தியாளர்களிடம் கூறு கையில், “மருத்துவர் பாலாஜியைச் சந்தித்து நடை பெற்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண் டோம். ஒரு நோயாளி உயிரி ழந்தது சம்பந்தமான விவரங்களை முழுமையாக பெற்ற பிறகு உங்களுக்கு விரிவான தகவல்களை தெரிவிக்கிறேன். மக்கள் தொகைக்கு ஏற்ப, நோயாளிகளுக்கு ஏற்ப மருத்துவர்கள் குறை வாக இருப்பதாக செய்தி கள் வருகிறது. இது குறித்து மருத்துவத் துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். இது சம்பந்தமாக ஆணை வெளியிடப்படும். விக்னேஷ் தாக்கப்பட்டது தொடர்பான புகார் வந்தாலும் எடுக்கப்படும். இதுவரை புகார்கள் எதுவும் வரவில்லை. நான் தான் செய்திகளை பார்த்து வந்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
ஏபெக் அமைச்சர் நிலை கூட்டம்
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின்(ஏபெக்) அமைச்சர் நிலை கூட்டம், நவம்பர் 14ஆம் நாள் பெருவின் தலைநகரான லிமாவில் நடைபெற்றது. இதில், ஏபெக் அமைப்பைச் சேர்ந்த 21 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்டு, பலதரப்பு ஒத்து ழைப்பு மற்றும் வர்த்தக கொள்கைகளை வலுப்படுத் துவது குறித்து விவாதித்தனர். பிரதேச பொருளாதார ஒருங்கிணைப்பை முன் னேற்றுதல், வர்த்தகம், முதலீடு, புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை மேம்படுத்துதல், தொடரவல்ல வளர்ச்சியை, உள்ளடக்கிய மற்றும் நெகிழ்ச்சியான பொ ருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகிய துறைகள் சார்ந்த ஒத்துழைப்பு நடவடிக்கைகள், இக்கூட்டத்தின் முன்முயற்சி முன்னுரிமைகளில் அடங்கும்.
காலநிலை மாற்றக் கட்டுப்பாடு: சீனாவின் பங்குக்கு பாராட்டு
புதிய காலச் சர்வதேசத் தகவல் தொடர்பு ஆய்வ கத்தின் மூலம் சீன ஊடகக் குழுமம், சீன மக்கள் பல்கலைக்கழகம் ஆகியவை உலகக் காலநிலை தொடர்பாக உலகெங்கிலும் 38 நாடுகளைச் சேர்ந்தவர்க ளிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் 7658 பேர் கலந்து கொண்டு பதிலளித்தனர். அவர்களுள் 83.5 விழுக்காட்டி னர் உலக காலநிலைக் கட்டுப்பாட்டுக்குச் சீனா ஆற்றி யுள்ள முயற்சிகளையும் பங்குகளையும் ஆக்கப்பூர்வ மாகப் பாராட்டினர். மேலும், அவர்கள் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்ப தில் சீனா ஆக்கப்பூர்வமாக பங்காற்றியுள்ளதாகவும், தூய்மையான அழகான உலகத்தைக் கூட்டாக உரு வாக்குவதற்குரிய நம்பிக்கையையும் வலிமையையும் சீனா கொண்டுள்ளது என்றும் தெரிவித்தனர். தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்பை முன்னேற் றுவதில் சர்வதேச சமூகத்திற்குச் சீனா முன்மாதிரியாக திகழ்கின்றது என்று 80.3 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.