மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளின் விவாதத்திற்கு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பதிலளித்துப் பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மாநில மாநாட்டை வாழ்த்தி கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் எழுதி, அபிநவ் சூர்யா ல.தி., சித்தார்த் கோ.மு., ஆகியோர் மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் ‘ரீட்டாவின் கல்வி – 1975-1985 நினைவலைகள்’ எனும் நூலை பதிப்பித்துள்ளது. இந்த நூலை மாநில மாநாட்டில் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் வெளியிட, ஜி.அரவிந்தசாமி பெற்றுக் கொண்டார். அருகில் நூலாசிரியர் பிருந்தாகாரத், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், பாரதி புத்தகாலயம் பதிப்பாளர் க.நாகராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.
தபோ விஜயகோஷ் எழுதி, ரவிச்சந்திரன் அரவிந்தன் மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘சமரம்’ எனும் நாவலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் வெளியிட, என்.அமிர்தம் பெற்றுக் கொண்டார். மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் ஆகியோர் உடன் உள்ளனர்.
கவிஞர் எஸ்.கவிவர்மன் தொகுப்பில் உருவான ‘செங்கொடி இயக்கத்தின் தன்னிகரில்லாத் தலைவர் தோழர் ஆர்.உமாநாத்’ எனும் நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் வெளியிட, திருச்சிபுறநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.சிவராஜ் பெற்றுக் கொண்டார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பெ.சண்முகம், நூலாசிரியர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
மாநாட்டு அரங்கில் பிரதிநிதிகள் பயன்பாட்டிற்காக மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் அரங்கம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 50 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி, விழுப்புரத்தில் நடைபெறும் கட்சியின் மாநில மாநாட்டிற்கு கணிசமாக பங்களிப்பு செய்தார். கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவரை பாராட்டி கவுரவித்தார்.