states

பொது சிவில் சட்டம் அரசியலமைப்பை சீர்குலைத்து விடும்:

சென்னை,ஜூலை 15- அரசியலமைப்பை சீர்குலைக் கும் பொது சிவில் சட்டத்தை நிறை வேற்றக் கூடாது என்று இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தின் சுருக்கம் வருமாறு: இந்தியாவில் பொது சிவில் சட்டம் தனிநபர் மசோதாவை கிரிலால் மீனா அறிமுகப்படுத்தி யதை எதிர்த்து, 9.12.2022 அன்று, மாநிலங்களவையில் நான் பேசும் போது, “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக வினர் தங்களது செயல் திட்டங்களை  ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்தி வருகின்றனர். காஷ்மீரை முடித்துவிட்டார்கள்.

இப்போது அவர்கள் பொது சிவில் சட்ட மசோதாவை கொண்டு வந்துள் ளனர். அப்படியானால், நாம் எங்கே  செல்கிறோம்? பேரழிவை நோக்கி யும், சிதைவை நோக்கியும் இந்தி யாவை இட்டுச் செல்கின்றனர். இச்சட்டம் வந்தால் சிறுபான்மை மக்கள் கடுமையாக பாதிக்கப்படு வார்கள். அவர்களின் உணர்வுகள் முற்றிலும் அழிந்துவிடும். எனவே, தயவு செய்து இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவது தடுத்து நிறுத்த வேண்டும். பெரும்பான்மை கிடைக்காது என்பதால், கடந்த முறை கைவிட்டுவிட்டார்கள். இந்த முறை அவர்களுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. எனவே, தற்போது திணிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் இது இந்தியாவிற்கு பேரழிவை ஏற்படுத்த வழிவகுக்கும். இது அவமானகரமான துக்க நாள். நான் மிகவும் வருந்துகிறேன். இந்த மசோதா அறிமுகம் ஆகாமல் தடுக்க  வேண்டும்”என்று கூறி என் கருத்தை  பதிவு செய்திருந்தேன். இந்தியாவில் குற்றவியல் சட்டங் களும், தண்டனைச் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால் உரிமையியல் சட்டங்கள் எனப்படும் சிவில் சட்டங்கள் மட்டும்  சாதி, மத, இன ரீதியாக கலாச்சா ரத்திற்கும் ஏற்ப மாறுபடும். முஸ்லிம்கள் மட்டும், சீக்கி யர்கள், சமனர்கள் என்று ஒருவர் சார்ந்துள்ள மாற்றத்திற்கேற்ப சிவில்  சட்டங்கள் மாறுபடுகின்றன. இந்து மதத்தில் இந்துக்கள் கூட்டுக் குடும்ப மாக வாழ்ந்தால் வரிச் சலுகைகள் உண்டு. இந்துக்கள் குழந்தைகளைத் தத்தெடுக்கும், ஜீவனாம்சம் பெறவும் தனி சட்டங்கள் உண்டு. அரசியலமைப்புச் சீர்குலை வை ஏற்படுத்துவதோடு மட்டு மல்லாமல், நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிராக பொது சிவில்  சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று மதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறி யுள்ளார்.

தொல். திருமாவளவன்

பொது சிவில் சட்டம்  தொடர்பான கடிதத்தில் திருமாவளவன் கூறி யிருப்பதாவது:- இந்த சட்டம் பன்மைத்துவ த்துக்கும், பழங்குடி சமூகங்க ளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த சட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சியில், அடிப்படை உரிமை களையும், அரசியலமைப்பு உறுதி செய்துள்ள மதச் சார்பின்மை கொள்கைகளையும் அரசு மீறு கிறது. இந்த சட்ட வரம்பிலிருந்து கிறிஸ் தவர்கள் மற்றும் சில பழங்குடியினப் பிரிவினருக்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்க படுவதாக செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருந்தால், பொது சிவில் சட்டத்தின் நோக்கம் குறித்து கேள்வி எழுகிறது. சட்டமேதை அம்பேத்கர் மீது அவருக்கு மரியாதை இருந்தால், இந்து மதத்தின் அனைத்து சாதி யினருக்கும் பொது சிவில் சட்டத்தை  கொண்டு வர வேண்டும். பொது சிவில் சட்டம் தொடர்பான இந்தக் கவலைகள் மற்றும் ஆட்சேபத்தை, இந்திய சட்ட ஆணையம் கவன மாகப் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தி ருக்கிறார்.

அன்புமணி ராமதாஸ்

பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணை யத்துக்கு பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் கடிதம் எழுதி யுள்ளார். இதில், நாட்டின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் என்று கூறிவிட்டு, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சிவில் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவது இந்தியாவின் அடையாளமான பன்மைத்தன்மை சிதைத்து விடும். அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை சமுதாயத்தினர் உரிமைகளை பறிப்பது டன், இந்தியாவின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சியை சட்ட ஆணையம் கை விட வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.