பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆங்கில பாடத்தேர்வில் குழப்பமான கேள்விகளுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்க தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு.
2023 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் ஏப்ரல் 10 தேதி நடைபெற்ற ஆங்கில பாடத்தேர்வில் சில கேள்விகளில் குழப்பம் நிலவியதால் அந்த கேள்விகளுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்க வேண்டுமென ஆசிரியர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் குழப்பம் நிலவிய 3 ஒரு மதிப்பெண் வினா 1 இரண்டு மதிப்பெண் வினாவிற்கு சலுகை மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்
4,5,6 ஆகிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் 28 ஆவது 2 மதிப்பெண் வினாவிற்கு மாணவர்கள் எப்படி பதிலளித்திருந்தாலும் மொத்தம் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.