புதுக்கோட்டை, ஜூலை 10 - 4 சிறுவர்களிடம் மரபணு பரிசோத னை நடத்த சிபிசிஐடி போலீசார் அளித்த மனுவின் பேரில், சிறாரின் பெற்றோரி டம் புதன்கிழமை விசாரணை நடத்தப்பட வுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பட்டியல் சமூகத்தினரின் குடி யிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், தற்போது சிபிசிஐடி போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி கேமரா உள்ளிட்ட நேரடி சாட்சிகள் எதுவும் இல்லாத நிலையில், தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மனிதக் கழிவின் மரபணுவுடன், ஏற்கெனவே விசாரிக்கப் பட்ட 119 பேரின் மரபணுவையும் ஒப்பிட்டுப் பார்க்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர். இதன்படி, ஏற்கனவே 21 பேரிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வேங்கைவயலைச் சேர்ந்த ஒரு சிறுவன் மற்றும் இறையூரைச் சேர்ந்த 3 சிறுவர் களிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து, மாவட்ட எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதி மன்றத்தில் ஏற்கனவே மனுசெய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஜெயந்தி, பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோர் சிறார்கள் என்பதால், அவர்களின் பெற்றோரின் கருத்தை அறிய வேண்டியது அவசியம். எனவே, அவர்களை ஜூலை 12 (புதன்) அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.