states

img

மேலும் ரூ.267 கோடி முதலீடு செய்யும் பாக்ஸ்கான்

சென்னை,அக்.25-  பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் ரூ.267 கோடி முதலீடு செய்கிறது.  தமிழ்நாட்டில் ஐபோன்-16 செல்போன்  உற்பத்தியை அதிகரிக்க பாக்ஸ்கான்  நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள் ளது. இதற்காக ரூ.267 கோடி முதலீட்டில் நவீன சாதனங்களை வாங்குகிறது. சீனா வுக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் உள்ள  தொழிற்சாலையில்தான் ஐபோன்-16 புரோ மாடல் செல்போன்கள் தயாரிக்கப்படு கின்றன. புதிதாக வாங்கப்படும் நவீன சாதனங்கள் இந்த மாத இறுதியில் தமிழ்நாட்டு தொழிற்சாலைக்கு வந்துசேரும் என்று பாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.