states

img

‘நசுக்க முயற்சிக்கும் அமெரிக்கா; நிமிர்ந்து நிற்கும் கியூபா!’

கியூபாவின் தேசிய சட்டமன்ற உறுப்பினரும் உலக கியூப மக்கள் நட்புறவுக் கழகத்தின் தலை வருமான பெர்னாண்டோ கொன்சாலஸ் லோர்ட் நவம்பர் 5 முதல் 7 வரை தில்லியில் மூன்று நாள் பயணம் மேற் கொண்டார். பெய்ஜிங்கில் நடைபெற்ற 10வது ஆசிய-பசிபிக் ஒற்றுமை மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு இவர் இந்தியா வந்தார். அவரது பயணத்தின் போது, தில்லியின் பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகளின் தலைவர்களுடன் சந்திப்பு மேற்கொண்டார். கியூபாவின் தற்போதைய நிலைமை மற்றும் பொருளாதார தடைகளின் விளைவு களைப் பற்றி விளக்கினார். தமது நாடு சிறியதாக இருந்தாலும் உலக உழைப் பாளி மக்களின் விடியலுக்காகப்  போராடும் பெரிய மாண்புடைய நாடாக உள்ளது என்று தெரிவித்தார். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழத்தில் (JNU) நடைபெற்ற மாபெரும் நவம்பர் புரட்சி நிகழ்விலும் கலந்து கொண்டார். கல்வி, சுகாதாரம்,  அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சோவியத் புரட்சியின் சாதனைகளைப் பாராட்டினார். அமெரிக்கா 1960 களிலிருந்து கியூபா வை நசுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பட்டினி, வறுமை மற்றும் பேரழிவு மூலம் மக்கள் மத்தியில் கலகத்தை தூண்ட முயற்சிக்கிறது. இருந்தாலும் கியூபா தன்  சமூகத்தின் சுதந்திரத்தை மேம்படுத்து வதில் சோசலிச உறுதியுடன் நிலைத் திருக்கும் என்று உறுதி தெரிவித்தார். இந்நிகழ்வுகளில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி மற்றும் பிறர் கியூபாவிற்கு தங்கள் ஆதரவினை தெரிவித்தனர்.