tamilnadu

img

நாளை கிராமசபை கூட்டம்!

சென்னை,நவம்பர்.22- தமிழ்நாடு முழுவதும் நாளை(நவம்பர் 23) கிராம சபைக் கூட்டம் நடைபெறும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 1ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டம் நாளை நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் கோட்டத்தில் பேசப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.