states

img

துப்பாக்கிச்சூட்டில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ராணுவ முகாமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து ராணுவம் தீவிர விசாரணை நடத்திவருகிறது.
   பங்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் இன்று அதிகாலை 4.35 மணிக்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளானர். துப்பாக்கிச்சூட்டை அடுத்து  பதிண்டா முகாம் உள்ள பகுதியை ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் யார் என்பது பற்றி ராணுவம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.இதனிடைடே நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு பயங்கரவாத தாக்குதல் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பதிண்டா ராணுவ முகாமில் 2 நாட்களுக்கு முன்பு 28 தோட்டாக்களுடன் துப்பாக்கி காணாமல் போன நிலையில் சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல். பஞ்சாப் ராணுவ முகாமில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் ராணுவ வீரருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.