states

img

முடி வளர சிகிச்சை பெற்ற 60க்கும் மேற்பட்டோருக்கு கண் பார்வை பாதிப்பு!

பஞ்சாபில் முடி வளர சிகிச்சை பெற்றக்கொண்ட 60க்கும் மேற்பட்டோர், கண் பார்வை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் சங்குரூரில் முடி வளர இலவச சிகிச்சை பெற்ற கொள்ளலாம் என இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து, மருத்துவ முகாமிற்கு பலர் சென்றுள்ளனர். இந்த முகாமில், முடி வளர தலையில் மருந்தை தடவிக் கொண்ட 60க்கும் மேற்பட்டோருக்கு சிறிது நேரத்தில், கண் எரிச்சல், பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்றக்கொண்ட 60க்கும் மேற்பட்டோர், கண் பார்வை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில் மருந்தால் பக்க விளைவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், உரிய அனுமதியின்றி மருத்துவ முகாம் நடத்திய 2 பேர் மீது அம்மாநில காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.