tamilnadu

நெருக்கடியில் உள்ள சிறு குறு தொழில்களை பாதுகாத்திடுக

நெருக்கடியில் உள்ள சிறு குறு தொழில்களை பாதுகாத்திடுக

நெருக்கடியில் உள்ள சிறுகுறு தொழில்களை பாதுகாக்க ஒன்றிய,  மாநில அரசுகள் உரிய தலையீட்டை செய்ய வேண்டும் என தொழில் முனை வோர் கூட்டமைப்பினர் வியாழ னன்று செய்தியாளர் சந்திப்பில் தெரி வித்தானர். கோவை ஆடிஸ் வீதியில் உள்ள  கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு அனைத்து  தொழில் முனைவோர் கூட்டமைப்பி னர் செய்தியாளர்களைச் சந்தித்த னர். இதில், கடந்த 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்பட்ட மின் கட்ட ணம் மற்றும் இதர துணைக் கட்ட ணங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற எங்களது கோரிக்கை இன் னும் நிறைவேற்றப்படவில்லை. மேலும், 2025ஆம் ஆண்டிலும் மின்  கட்டணம் உயர்த்தப்படக் கூடாது. 12 கிலோவாட் மின் நுகர்வோரை 3B-யிலிருந்து 3A-வுக்கு மாற்றுவதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்கான அரசாணை  வெளியிடப்படாமல் நடைமுறைப்ப டுத்தப்படவில்லை. அரசு உடனடி யாக இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நிலைக் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும், தொழிற் சாலைக் கூரைகளில் அமைக்கப் பட்ட சூரிய மின் தகடுகள் மூலம் உற் பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு விதிக்கப்படும் நெட்வொர்க் கட்ட ணத்தை முழுமையாக ரத்து செய்ய  வேண்டும், வெல்டிங் தொழிலுக்கு விதிக்கப்படும் 15% கூடுதல் கட்ட ணத்தை உடனடியாக நீக்க வேண் டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, வரும் நவம்பர் 9ஆம் தேதி  கோவையில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில்  தொழில்துறை மட்டுமின்றி அனைத்து சங்கங்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும்.  கோவைக்கு வந்திருந்த ஒன்றிய நிதியமைச்சர் ஒரு மணி நேரம் பேசி விட்டுச் சென்றார். கார்ப்பரேட் துறை யினர் எளிதாக அரசு அதிகாரிக ளைச் சந்திக்கும் சூழல் நிலவுகிறது. ஆனால் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினரை கண்டுகொள்ளாத சூழல் நிலவுவதாக வேதனை தெரி வித்தனர்.