ஆன்லைனில் கருத்து சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதாக ஒன்றிய அரசு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் எக்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
ஐடி சட்டத்தின் பிரிவு 79(3)(b) மற்றும் சஹ்யோக் போர்ட்டலை பயன்படுத்தி, சட்டப்பூர்வ பாதுகாப்புகளைத் தவிர்த்து, சட்டவிரோதமான மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத சென்சார் முறைகளை ஒன்றிய அரசு பின்பற்றுவதாகவும், இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் மனுவில் எக்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எக்ஸ் நிறுவனத்தின் ஏஐ சாட்பாட்டான் க்ரோக், பாஜக பரப்பிய பல பொய்களை அம்பலப்படுத்துவதால், அதன் பதில்கள் நிறுத்தம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்திருப்பது பரபரப்பாக மாறியுள்ளது.