புதுச்சேரி, மார்ச் 7- புதுவை, விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் மூலகுளம் பகுதியில் சாலையோர வாய்க்கால்கள் கடந்த சில வருடங்க ளாக தூர்வாரப்படவில்லை. இத னால் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வசிக்கும் மக்கள் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என உழவர்கரை நகராட்சியிடம் மனு அளித்தனர். ஆனால், நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே வாய்க்கால் கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளதால் வீடு களுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில வீடு களுக்குள் கழிவுநீர் புகுந்து வரு கிறது. கழிவுநீர் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகமாகி அங்கு வசிக்கும் 3க்கும் மேற்பட்ட கை குழந்தை களுக்கு தோல் வியாதி, காய்ச்சல் போன்ற உடல்நலக் குறைவு ஏற்ப ட்டுள்ளது. இதனால் உடனடி யாக வாய்க்காலை தூர்வார வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வரு கின்றனர்.