புதுச்சேரி,மார்ச்.14- கால்நடைகளை பலவந்தமாக பிடித்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாடு உரிமையாளர்கள் நகராட்சி வாகனத்தை முற்றுகையிட்டனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை, ரெயின்போ நகர், கோவிந்தசாலை ஆகிய நகர பகுதியில் கால்நடைகளை வீட்டி லேயே பராமரித்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர். சில நேரங்களில் மாடு வளர்போரை மீறி மாடுகள் சாலையில் சுற்றித் திரிவதாக நகராட்சி அதிகாரிகளிடம் சிலர் புகார் தெரிவித்துள்ளனர். இதை யடுத்து சாலையில் சுற்றித் திரியும் மாடு களுக்கு அபராதம் விதித்து வரும் நகராட்சி அதிகாரிகள் உரிமையாளரை தொடர்பு கொள்ள முடியாத மாடுகளை வாகனம் மூலம் பிடித்துச் செல்கின்றனர். இந்நிலையில் ரெயின்போ நகரில் மாடு கள் பராமரிக்கும் இடத்திலேயே மாடுகளை நகராட்சி அதிகாரிகள் பிடித்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உரிமையாளர்கள் அந்த வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த உழவர்கரை நகராட்சி அதி காரிகள் அபராதம் செலுத்தினால் தான் சிறைபிடிக்கப்பட்ட மாடுகளை விடு விப்போம் என்று கூறி மாடு உரிமையாளர்க ளிடம் ரூ. 4 ஆயிரம் அபராதத் தொகை வசூலித்துள்ளனர் என்று புதுச்சேரி கோமாதா மாடு வளர்ப்போர் பால் உற்பத்தி யாளர் சங்க செயலாளர் அழகப்பன் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினார். புதுச்சேரியில் படித்து முடித்த வாலி பர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க முடியவில்லை, பல்வேறு சிரமங்களுக்கு இடையே இந்த தொழிலை நாங்கள் செய்து வருகிறோம். எனவே நகராட்சி அதிகாரிகள் இதுபோன்ற நட வடிக்கையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.