புதுச்சேரி, ஜூலை 14- மாணவர்களுக்கு புத்தகம் சீருடை வழங்காத என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரியில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் பள்ளி கள் திறந்து ஒரு மாதமாகி யும் இலவச பாட புத்தகங் கள், சீருடைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்க ளுக்கான கல்வி உதவித் தொகை வழங்காததைக் கண்டித்தும், கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு ரூபாய் கட்டண பேருந்து வசதியை செய்து கொடுக்க வலியுறுத்தியும் புதுச்சேரி எல்லைப் பிள்ளை சாவடியிலுள்ள கல்வித்துறை அலுவ லகத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சீனி வாசன் தலைமையில் முற்று கையிட்டனர். முன்னதாக, சுப்பையா சிலையிலிருந்து துவங்கிய ஊர்வலத்தை கட்சியின் மூத்த தலைவர் தா.முருகன் தொடங்கி வைத்தார். மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், பிரபுராஜ், கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, சத்தியா மற்றும் நகர கமிட்டி செயலாளர் மதிவாணன், உழவர் கரை நகரச் செயலாளர் ராம்ஜி, மன்னாடிபட்டு, பாகூர் கமிட்டி செயலாளர்கள் ரகு. அன்புமணி, சரவணன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அதிகாரிகள் உறுதி
மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம் தலைமை யில் கல்வித் துறை யின் இணை இயக்கு நர் சிவகாமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்டு அனைத்து கோரிக்கை களையும் நிறைவேற்று வதற்கு உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்ப ட்டது.