states

img

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் ஒன்றிய அமைச்சரிடம் முதல்வர் கடிதம்

புதுச்சேரி,ஜன,19- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஒன்றிய சட்டதுறை அமைச்சரிடம் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை விடுத்தார். புதுச்சேரி கடலூர் சாலை யிலுள்ள ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.13.79 கோடி செலவில் 105 அறைகள் கொண்ட வழக்க றிஞர் அலுவலக கட்டி டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழ னன்று(ஜன.19) நடை பெற்றது. புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி செல்வ நாதன்  தலைமை தாங்கி னார். ஒன்றிய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர்  கிரண் ரிஜிஜூ  புதிய கட்டி டத்திற்கான அடிக்கலை நாட்டினார்.  விழாவில் புதுச்சேரி முதல்வர் என்.ஆர்.ரங்கசாமி,துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா, சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், சட்ட அமைச்சர் லட்சுமி நாராயணன், மாநிலங்களவை உறுப்பி னர் செல்வகணபதி, சட்ட மன்ற உறுப்பினர் நேரு, தலைமை செயலாளர்,   உள்ளிட்ட திரளான வழக்கறிஞர்கள்  கலந்து கொண்டனர். இந்த விழாவில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சரிடம், முதல்வர் ரங்கசாமி கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில், நீண்ட நாள் கோரிக் கையான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி யில் தேசிய சட்டப் பயி லகம் அமைக்க வேண்டும். உயர்நீதிமன்ற கிளை புதுச்சேரியில் அமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தியிருந்தார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கு வதில் ஒன்றிய பாஜக அரசு பாரபட்சம் காட்டுவதால் அனைத்து கட்சி பிரதி நிதி களையும் தில்லிக்கு அழைத்து சென்று பிரத மரிடம் வலியுறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், ஒன்றிய அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார்.