புதுச்சேரி, ஏப். 7- புதுச்சேரி வில்லியனூர் அடுத்த உருவை யாறு பேட் பகுதியில் சுமார் ஆயிரம் குடி யிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதிக்கு திருக்காஞ்சி, உருவையாறு பகுதியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படு கிறது. கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வில்லி னூர் கொம்யூன் அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பைபாஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொம்யூன் ஆணை யர் ஆறுமுகம் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது புதிய ஆழ்குழாய் கிணறு போடப்பட்டுள்ளதால் அதன் மூலம் விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும். உப்பு கலந்த குடிநீர் வருவதால் விரைவில் இந்த பகுதி யில் வேளாண் துறை அமைச்சரிடம் பேசி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அனை வரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.