புதுச்சேரி, மே 20- புதுவை மின்துறையை தனியார் மயமாக்க முதலமைச்சர் ரங்கசாமி ஒப்புதல் அளித்துள்ளதாக காங். தலைவர் நாராயண சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமித்ஷா புதுவை வந்த போது புதிய திட்டத்துக்கு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தனர். ஆனால் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அவர் வந்து சென்ற பின்னால் கடந்த 9ஆம் தேதி புதுவை மின்துறையை தனியார்மய மாக்க ஒப்புதல் அளித்து ரங்கசாமி, ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மின்துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கு சொத்து உள்ளது. மின்துறையால் அரசுக்கு எந்த நட்டமும் இல்லை. தனியார் மயமானால் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 8க்கு பெற வேண்டியிருக்கும். அங்கு பணியாற்றும் 3 ஆயிரத்து 500 ஊழியர்களின் நிலை என்ன? பணி பாது காப்பு உண்டா? அரசு ஊழியர்களாக தொடர் வார்களா? மின்துறை தனி யார் மயமாக்கும் முடிவை அமைச்சரவையை கூட்டி முடிவெடுத்தார்களா? புதுவை மாநிலத்தை ஒன்றிய பாஜக அரசு தனது கையில் எடுத்துக் கொண்டுள்ளதால் புதுவையின் தனித்தன்மை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. முதல மைச்சர் ரங்கசாமி யும் பாஜகவிடம் சரணாகதி அடைந்துவிட்டதால் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது. மக்கள் கடும் அவதிக் குள்ளாகியுள்ளனர். புதுவை என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் ஊழல் பட்டிலை தயாரித்து வருகி றோம். விரைவில் இதை வெளியிடுவோம். இவ்வாறு அவர் கூறி னார்.