states

புதுவையில் கலாச்சார சீரழிவு: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி, அக். 20- ரங்கசாமி ஆட்சியில் புதுவையில் கலாச்சார சீரழிவு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சரியான திட்டமிடல் இல்லாமல் பாப்ஸ்கோ அங்காடி செயல்படுகிறது. புதுவையில் மானிய தொகுப்பு பைகளை வாங்க 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தை போல புதுவையிலும் ஆளுநரிடம் ஒப்புதல் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தை நிறுத்த வேண்டும். ரங்கசாமி ஆட்சியில் புதுவை யின் கலாச்சாரம் சீரழிந்துவருகிறது. புது கலாச்சாரமாக பப் ஆரம்பிக்கப்பட்டு, போதைப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இளை ஞர்கள் பாதிக்கப்படுகி றார்கள். பப் அருகில் வசிப்பவர்கள் அதிகம் பாதிக்கிறார்கள். இதனை தடுக்க ஆளும் கட்சி உரிய நடவடிக்கை எடுக்க வில்லை.  ஒன்றிய அரசு, புதுவைக்கு நிதி கொடுத்திருந்தால் அதனை பகிரங்கமாக தெரியப்படுத்தாமல் மூடிப்பறைப்பதன் மர்மம் என்ன? என்பதை புதுவை மக்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தெரியப்படுத்த வேண்டும்.  இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.