states

img

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்குக: இபிஎப் ஓய்வூதியர்கள்

புதுச்சேரி, நவ.24- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்) ஓய்வூதி யளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதி யம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என ஓய்வூதியர்நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இபிஎப் ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சிறப்புகூட்டம் புதுச்சேரியில் வியா ழனன்று (நவ. 24) நடபெற்றது. சங்கத்தின் ஆலோசகர் ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு புதுச்சேரி ஓய்வூதியர்கள் சங்கத்தின் தமிழ் மாநில பொதுச் செய லாளர் கே.பி.பாபு கலந்து கொண்டு, உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து விளக்கினார். சிஐடியு புதுச்சேரி உதவித் தலைவர் கொளஞ்சியப்பன், சங்க செயலாளர் டி.குணசேகரன், நிர்வாகிகள் சுப்ரமணி, ராமலிங்கம், பொன்னுரங்கம், வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இபிஎப் ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம், விலைவாசி உயர்வுக்கு ஏற்றாற் போல் பஞ்சப்படியுடன் சேர்த்து வழங்க வேண்டும், மருத்துவ வசதியை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.