states

img

நாட்டின் மிக நீண்ட ஆற்றுப்பாலம் திறப்பு

ஒடிசாவில் அமைந்துள்ள மகாநதி ஆற்றின் குறுக்கே, கட்டாக்கில் கட்டப்பட்டுள்ள நாட்டின் மிக நீண்ட ஆற்றுப்பாலத்தை முதல்வர் நவீன் பட்நாயக் திறந்து வைத்துள்ளார்.
இது குறித்து ஒடிசா அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், உள்ளூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. படம்பா மற்றும் பைதேஸ்வர் பகுதிகளை பங்கியுடன் இணைக்கும் இந்தப் பாலம் 45 கி.மீ. தொலைவிலிருக்கும் பகுதிகளையும், சிங்கநாத் கோயிலையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
சுமார் 3.4 கி.மீ. நீளம் கொண்ட இந்தப் பாலம் ஆங்கிலத்தில் டி என்ற வடிவில் ரூ.111 கோடி பொருள்செலவில் கட்டப்பட்டுள்ளது.