கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றைத் தடுத்திடுவதற்காக, குஜராத் மாநிலத்தில் பலர் பசுமாட்டுப் பண்ணைகளுக்கு சென்று பசுஞ்சாணியையும், பசுமூத்திரத்தையும் உடல் முழுவதும் தடவிக்கொள்கின்றனர். இதனால் பயனேதும் இல்லை என்பது மட்டுமல்ல, பல்வேறு விதமான தொற்றுகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக மூத்த மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களிடம் கூறுகையில், இது மிகவும் ஆபத்தான, விசித்திரமான போக்கு என்று தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு நாட்டின் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அமைச்சர்களாக இருந்த குஜராத் மாநிலத்தில்தான் இது பரவலாக நடந்து கொண்டிருக்கிறது. பசுஞ்சாணியும், பசு மூத்திரமும் மருத்துவ மகிமை கொண்டவை என்கிற நம்பிக்கை நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாக குஜராத் மாநிலத்திலும் இருந்துவருகிறது. இதனை வலதுசாரி அரசியல்வாதிகளும் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. நாட்டின் பெரும் நகரங்களிலிருந்து, சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கும் இப்போது பரவியிருக்கிறது. இந்த நிலையில்தான் குஜராத்தில் பலர் பசுஞ்சாணியும், பசு மூத்திரமும் கொரோனா தொற்றிலிருந்து தங்களைக் காப்பாற்றும் என்று உடம்பு முழுதும் பூசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும், மருத்துவர்கள், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இது எவ்விதமான பாதுகாப்பையும் அளிக்காது என்று எச்சரித்திருக்கிறார்கள். மாறாக இது கருப்பு பூஞ்சை தொற்று அல்லது மியூகோமைகோசிஸ் என்னும் தொற்று போன்று பல்வேறுவிதமான தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் கூறியிருக்கிறார்கள்.
இந்திய மெடிகல் அசோசியேசன் தேசியத் தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயபால் இது தொடர்பாகக் கூறுகையில், பசுஞ்சாணியும், பசு மூத்திரமும் மனித உடம்பில் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதற்கு துல்லியமான அறிவியல் சாட்சியம் எதுவும் கிடையாது என்று கூறுகிறார். மாறாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பல்வேறு விதமான நோய்கள் பரவுவதற்கான ஆபத்துக்கள்தான் இருக்கின்றன என்றும் அவர் கூறுகிறார்.
(ந.நி