states

img

மிக் 29 கே பயிற்சி விமானம் விபத்து

இந்திய கடற்படையின்  ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலில் இருந்து மிக்-29கே ரக பயிற்சி விமானம் ஒன்று 2விமானிகளுடன்  நேற்று புறப்பட்டு சென்றது.
இந்த விமானம் நேற்று மாலை 5 மணியளவில் அரபிக்கடலில் விழுந்தது.  தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் விபத்தில் சிக்கிய விமானி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். மேலும் விபத்தில் சிக்கிய மற்றொரு விமானியை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
கடந்த ஆண்டு நவம்பரில் மிக்-29கே ரக விமானம் ஒன்று கடலில் விழுந்தது.  விசாரணையில் பறவை மோதி விபத்து ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.