டெல்லியில் பொதுமக்கள் அலுவலகத்திற்கும், வேலைக்கு செல்வதற்கும் மாதம் ஒரு நாளாவது சைக்கிளை பயன்படுத்த வேண்டும் என மனீஷ் சிசோடியா தெரிவித்தார்.
டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் டெல்லி துணை முதல் மந்திரி மனீஷ் சிசோடியா இன்று சுற்றுப்புற தூய்மை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, காற்று மாசை குறைக்க பொதுமக்கள் அலுவலகத்திற்கும், வேலைக்கு செல்வதற்கும் மாதம் ஒரு நாளாவது சைக்கிளை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். காற்று மாசு பிரச்சனையிலிருந்து மக்களைக் காக்க பள்ளிகள் இணைய வழி வகுப்புகளை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். காற்று மாசு பிரச்சனையிலிருந்து மக்களைக் காக்க பள்ளிகள் இணைய வழி வகுப்புகளை நடத்த வேண்டும் என டெல்லி அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.