states

பாஜக ஆட்சியின் கடந்த 4 ஆண்டில் அமலாக்கத்துறை வழக்கு 505% அதிகரிப்பு 9 ஆண்டுகளில் ரெய்டு எண்ணிக்கை 2,555% ஆக உயர்வு

புதுதில்லி, ஏப்.2- ஒன்றிய பாஜக அரசின் ஒன்பது ஆண்டுகளில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு 505 சதவீதம் அதிகரித் துள்ள நிலையில், கடந்த 9 ஆண்டு களில் ரெய்டுகளின் எண்ணிக்கை 2,555 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.  கடந்த சில ஆண்டுகளாக அம லாக்க இயக்குநரகத்தின் அதிரடி சோத னைகளால், அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் பல்வேறு விதிகளின் கீழ் ஏராளமான பண மோசடி வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. குறிப்பாக அரசியல் தலை வர்கள் உட்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  பெமா மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 500  சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள் ளது. ஒன்றிய நிதி அமைச்சக தக வலின்படி, கடந்த 2018-19 மற்றும் 2021-22ம் ஆண்டுகளுக்கு இடையில் (கிட்டத்தட்ட 4 ஆண்டுகள்), அம லாக்கத்துறையால் பதிவு செய்யப் பட்ட மொத்த வழக்குகளின் எண்ணி க்கை 505 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2018-19ல் 195 வழக்குகள் பதிவு  செய்யப்பட்ட நிலையில், 2021-22ல் 1,180 வழக்குகளாக அதிகரித்துள் ளன. அதேநேரம் அமலாக்கத்துறை நடத்திய சோதனை எண்ணிக்கை யானது 2004-14 மற்றும் 2014-22ம்  ஆண்டுக்கு இடையில் 2,555 சத வீதம் அதிகரித்துள்ளது. அதாவது 2004-14ம் ஆண்டுக்கு இடையில் 112  இடங்களில் சோதனைகள் நடத்தப் பட்டன.  ஆனால், 2014-22-ஆம் ஆண்டுக்கு (ஒன்றிய பாஜக ஆட்சி) இடையில், 2,974 இடங்களில் சோதனை நடத்தப் பட்டுள்ளது. அதாவது சோதனை களின் எண்ணிக்கை 2,555 சதவீத மாக உயர்ந்துள்ளது. இதுபோன்ற சோத னைகள் மற்றும் வழக்குகளின் அடிப் படையில் ரூ.95,432.08 கோடி மதிப் புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள் ளன. மேலும் அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 95  சதவீதத்திற்கும் மேற்பட்ட வழக்கு களுக்கு தண்டனை பெற்றுத் தரப் பட்டுள்ளதாக தகவல்கள் கூறு கின்றன. அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போதைய தரவுகளின்படி பார்த்தால் அமலாக்கத்துறையின் நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.