states

img

இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரம் மீது வலுக்கும் சந்தேகம்

மும்பை சமீபத்தில் நடைபெற்ற மகா ராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தல் முடிவில், தேர்தல் ஆணையம் - மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் மூலம் பல்வேறு சதி கள் அரங்கேறியுள்ளதாகவும், இதன் காரணமாகவே மகாயுதி கூட்டணி சர்ச் சைக்குரிய வகையில் வெற்றி பெற்றது  என எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணிக் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் தேர்தல் ஆணை யத்திடம் காங்கிரஸ் கட்சி நேரில் விளக்கம் கோரியுள்ளது. இதுதொடர் பாக தேர்தல் ஆணையம் இன்னும் அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.

மார்க்கட்வாடி கிராம மக்கள்

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநி லம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள மல்ஷிராஸ் சட்டமன்ற தொகுதியின் மார்க்கட்வாடி கிராம மக்கள் இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சந்தே கம் இருப்பதாகவும், இதனால் எங்கள்  கிராமத்தில் வாக்குச் சீட்டு மூலம் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று  மாவட்ட நிர்வாகத்தை அணுகியுள்ள னர். ஆனால் சோலாப்பூர் மாவட்ட  நிர்வாகம் மார்க்கட்வாடி கிராம மக்க ளின் கோரிக்கையை நிராகரித்தது. இதனால் மார்க்கட்வாடி கிராமத்தில் வாக்குச்சீட்டு முறையில் மறுதேர்தல் நடத்த இருப்பதாக கிராம மக்கள்  அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, டிச., 2 முதல் 5ஆம் தேதி வரை மார்க்கட் வாடி கிராமத்தில் 144 தடை உத்தர வுக்கு இணையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே போல வன்முறை நடந்த இடம் போல பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப் பட்டுள்ளது.

100 வாக்குகளை பெற  முடியாத நபர் 1000 வாக்குகள் பெற முடியுமா?
 

இந்த விவகாரம் தொடர்பாக மார்க்கட்வாடி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கூறுகையில்,”மல்ஷிராஸ் சட்டமன்ற தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் (சரத்) வேட்பாளர் உத்தம் ஜன்கர் 13,147 வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற்றார். நாங்கள் காலங்காலமாக சரத் பவார் தலைமை யிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வருகிறோம். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்கட்வாடி கிராம மக்கள் அனை வரும் ஒரு தீர்மானம் நிறைவேற்றிய தைப் போல தேசியவாத காங்கிரஸ் (சரத்) வேட்பாளர் உத்தம் ஜன்கருக்கு வாக்களித்தோம். 

எங்கள் கிராமத்தில் மொத்தம் 2,000 வாக்குகள் உள்ளன. இதில் 1,900 பேர் வாக்களித்துள்ளனர். ஆனால் தேசியவாத காங்கிரஸ் (சரத்) வேட்பா ளர் உத்தம் ஜன்கர் வெறும்  843 வாக்கு களை மட்டுமே பெற்றுள்ளார். மார்க்கட்வாடி கிராமத்தில் 100 வாக்கு களை பெற முடியாத பாஜக வேட்பா ளர் ராம் சத்புதே 1,003 வாக்குகள் பெற்றுள்ளார். இதனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது சந்தேகம் உள்ளது நிரூபணமாகி யுள்ளது. இதன்காரணமாகவே வாக்குச்சீட்டு முறையில் மறுதேர்தல் நடத்தும்படி மாவட்ட நிர்வாகத்தை அணுகினோம். ஆனால் எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அத னால் தான் மார்க்கட்வாடி கிராமத்தில் தனியாக வாக்குச்சீட்டு முறையில் மறு தேர்தல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.

அருகில் உள்ள கிராமமும்...

மார்க்கட்வாடி கிராமத்திற்கு அருகில் உள்ள உம்பாடி தஹிகான் கிராமமும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது சந்தேகம் உள்ளது என கூறியுள்ளது. எங்கள் தொகுதியிலும் பாஜக சந்தேகத்திற்கிட மான வகையில் அதிக வாக்குகள் பெற்றுள்ளது என அக்கிராம மக்கள் கூறியுள்ளனர்.

எதிர்க்கட்சிகள் தான் இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தன. ஆனால் தற்போது ஆதாரங்களுடன் கிராம மக்களும் இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரங்க ளுக்கு எதிராக அணி திரண்டு வரு கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாஜக வென்ற 102 தொகுதிகளில்  25,000 வாக்குகள் அதிகரிப்பு

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக மட்டும் தனியாக வென்ற 102 தொகுதிகளில் சந்தேகம் வலுத்து வருகிறது. அதாவது 102 தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் மக்களவை தேர்தலை விட, சட்டமன்ற தேர்தலில் தலா 25,000 வாக்குகள் அதிகரித்துள்ளது. இது இயற்கைக்கு மாறானது ஆகும். இது தொடர்பாகவும் விளக்கம் அளிக்க காங்கிரஸ்கட்சிதேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாகவும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.