states

img

மும்பை: 19 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை – 2 பேர் கைது  

மும்பையில் 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோவண்டி போலீசார் 2 பேரை கைது செய்தனர்.  

மும்பையின் கிழக்குப் புறநகரான கோவண்டியில் ஒரு பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.  

இதுகுறித்து காவல்துறை ஆய்வாளர் அர்ஜீன் ராஜானே இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், சனிக்கிழமை அதிகாலை 19 வயது பெண் ஒருவர் சிவாஜி நகர் பகுதியில் பேருந்து நிலையத்திலிருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் தனியாக செல்வதை பார்த்த 4 பேர் அவரை பின் தொடர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். 

இந்த வழக்கில் சனிக்கிழமை நள்ளிரவு 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 பேரை பிடிக்க கோவண்டி போலீசார் தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.