states

img

மியான்மர் ராணுவ விமானம் மிசோரம் அருகே விபத்து!

மிசோரம், ஐஸ்வால் புறநகரில் உள்ள லெங்புய் விமான நிலையத்தில், மியான்மரின் ராணுவ விமானத்தைத் தரையிறக்கும்போது கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விமானத்தில் பயணித்துப் படுகாயமடைந்த 8 பேர் மீட்கப்பட்டு, லெங்க்புய் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில், விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளதாக தகவல்.
இந்த ராணுவ விமானத்தில் விமானிகளுடன் சேர்த்து மொத்தம் 14 பேர் பயணம் செய்ததாக மிசோரம் மாநில காவல்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.
இந்த விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.