states

img

மணிப்பூரில் ஸ்டார்லிங்க் கருவிகள் பறிமுதல் எலான் மஸ்க் மறுப்பு


கடந்த 20 மாதங்களாக பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலம் வன் முறையால் பற்றி எரிந்து வரு கிறது. இந்த வன் முறைக்கு 260 பேர் பலியாகியுள்ளனர். பல லட்சம் மக்கள் சொந்த மாநிலத்தி லேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்ற னர்.

இந்நிலையில், மணிப்பூரின் இம்பால் கிழக்கில் உள்ள கெய்ராவ் குனோ பகுதி யில் டிசம்பர் 13ஆம் தேதி அதிநவீன அம்சங்கள் கொண்ட ஸ்டார்லிங்க் கருவிகளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். மணிப்பூரில் வன்முறை சம்பவம் வெடித்த பிறகு ஸ்டார்லிங்க் கருவிகளைக் கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும். இதுதொடர்பாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறு கையில்,”சோதனை நடத்திக் கொண்டி ருந்தபோது, ​​ஆயுதமேந்திய மர்ம நபர்க ளால் கைவிடப்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் ஆண்டெனா மற்றும் திசை காட்டும் கருவிகள் கண்டெடுக் கப்பட்டன” என தெரிவித்தனர். 

உலகின் முதன்மையான பணக்கார ரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமானது தான் ஸ்டார்லிங்க் சாதனம் ஆகும். இந்தியாவில் ஸ்டார்லிங்க் சாதன பயன் பாடு அவ்வளவாக கிடையாது. அப்படி இருக்கையில் ஸ்டார்லிங்க் சாதனம் எப்படி மணிப்பூருக்குள் வந்தது என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஸ்டார்லிங்க் கருவியில் “ஆர்பிஎப்/ பிஎல்ஏ (RPF/PLA)” என்று எழுதப்பட்டிருந்தது. ஆர்பி எப்/ பிஎல்ஏ என்பது மக்கள் விடுதலை இராணுவம் மற்றும் அதன் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணி  ஆகும். இது மெய்டெய் தீவிரவாதக் குழு வைக் குறிப்பதாகும். மணிப்பூரில் குக்கி- மெய்டெய் சமூகங்களுக்கு இடையே மோதல் தான் வன்முறையாக நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மஸ்க் மறுப்பு

மணிப்பூரில் கைப்பற்றப்பட்ட ஸ்டார்லிங்க் உபகரணங்களின் படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரு கிறது. இதுதொடர்பாக ஸ்டார்லிங்க் நிறு வனர் எலான் மஸ்க் கூறுகையில், “இந்தியாவின் மீது ஸ்டார்லிங்க் செயற் கைக்கோள் கற்றைகள் கிடையாது. இது தவறானது ஆகும்” என அவர் கூறினார்.