மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம், மாவட்டத்தில் நான்கு மாடியுடன் கூடிய அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்குக்குறைப் பிரசவம் மற்றும் ஏதேனும் குறைபாடுடன் பிறக்கக்கூடியகுழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்க தனிப் பிரிவு செயல்பட்டுவருகிறது.
இந்த மருத்துவமனையில் ஜனவரி 9 சனிக்கிழமையன்று அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்சிக்கி 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இவர்கள்ஒரு மாதம் முதல் மூன்று மாதத்துக்குள்ளான குழந்தைகள்என்றும் இவ்விபத்திலிருந்து 7 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட 7 குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என்று அறுவை சிகிச்சை மருத்துவர் பிரமோத் கன்டேட் கூறினார்.உயிரிழந்த 10 குழந்தைகளின் குடும்பத்துக்குத் தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.பொது மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி 48 மணிநேரத்திற்குள் உண்மை நிலவரம் அடங்கியவிவர அறிக்கை ஒன்றை அனுப்பி வைக்கும்படி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், பண்டாரா மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளது.முதற்கட்ட விசாரணையில் மின் கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளது என எனக்கு தகவல் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த குழந்தைகளில் 3 பேர் தீ விபத்தில் இறந்துள்ளனர். 7 குழந்தைகள் தீப்புகையால் உயிரிழந்து உள்ளனர். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தோப் கூறியுள்ளார்.இச்சம்பவத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கலும், ஆறுதலும் தெரிவித்துள்ளனர்.