states

img

65 லட்சம் வாக்குகள் பதிவு மகாராஷ்டிராவில் கடைசி நேர வாக்குப்பதிவு அதிகரிப்பு எப்படி?

புதுதில்லி 288 தொகுதிகளைக் கொண்ட மகா ராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 23 அன்று வாக்கு எண் ணிக்கை முடிவில் ஆளும் மகாயுதி கூட்டணி (பாஜக, சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்)) 230 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியைக் கைப் பற்றியது. இந்நிலையில் 95 தொகு திகளில் பதிவான வாக்குகளுக் கும், தேர்தல் ஆணையம் அறிவித்த  வாக்குகளுக்கும் நிறைய வித்தி யாசங்கள் இருந்தன. 

இந்நிலையில், மகாராஷ்டிரா வில் கடைசி மணிநேர வாக்குப் பதிவு அதிகரிப்பு தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநி லங்களவை எம்.பி., ஜான் பிரிட் டாஸ் இந்திய தேர்தல் ஆணை யத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு எழுதிய கடிதத்தில், “இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) எப்போதும் சர்ச்சைக ளுக்கு மத்தியில் உள்ளன. எந்தச் சூழ்நிலையிலும் அவற்றை தவ றாகப் பயன்படுத்த முடியாது என்று கூற முடியாது. நவீன தொழில்நுட்பத்தில், எவ்வகை யான பாதுகாப்புக் கருவிகளையும் சிக்கலற்ற முறையில் ஹேக்கிங் செய்யும் திறன்கள் இன்றைய உலகில் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நிர்மலா சீதாராமனின் கணவர்

மகாராஷ்டிர தேர்தல் முடிவு கள் குறித்து பிரபல சமூக-பொரு ளாதார அறிஞரும், ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரக்கலா பிரபாகர் வெளியிட்ட கருத்துக்கள் மிகவும் முக்கியமானவையும், அதிர்ச்சி யூட்டும் தன்மை கொண்டவை யாகவும் உள்ளன.

மகாராஷ்டிராவில் வாக்குப் பதிவு முடிந்துவிட்ட சூழலில், பதிவு  செய்யப்பட்ட வாக்குகள் மற்றும் பின்னர் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் வாக்கு விவரங்களுக் கிடையே மிகுந்த சந்தேகத்தன்மை காணப்படுவதாக பரக்கலா பிரபாகர் கண்டுபிடித்துள்ளார்.

பொதுவாக இறுதிக்கட்டத்தில் பதிவாகும் வாக்குப்பதிவில் 1% வரை உயர்வு இயல்பானது ஆகும். ஆனால் இயல்புக்கு மீறிய உயர்வு நிகழ்வதை பரக்கலா பிரபாகர் ஆராய்ந்துள்ளார். மகாராஷ்டிரா மட்டுமின்றி, ஹரியானா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல்களிலும் பரக்கலா பிரபாகர் ஆய்வில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளி வந்துள்ளன. இத்தகைய இயல்பு க்கு மீறிய வாக்குப்பதிவு உயர்வு கள் பாஜகவின் வெற்றிக்குத் துணைபோயுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். 

தேர்தல் முடிவு சந்தேகம் தொ டர்பாக  குடிமக்களால் அளிக்கப் பட்ட மனுவை தேர்தல் ஆணை யம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது என்றும் பரக்கலா பிரபாகர் குறிப்பிட்டார்.

ஒன்றிய அரசிடம் இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

தேர்தல் ஆணையம் ஒரு அரசியலமைப்பு அமைப்பாகும். ஆனால் எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும், அதன் பொறுப்பு களில் நேர்மையாக செயல்பட வேண்டியது அவசியம். எந்த ஒரு சந்தேகத்தையும் மக்கள் மனதில் இருந்து நீக்காமல் தேர்தல் நடை முறை  தூய்மையாக இருக்க  முடியாது. தேர்தல் ஆணையம் சுயாதீனமானதா என்பதை என் னால் நம்ப முடியவில்லை. சுயா தீனமாக இருக்க வேண்டுமெனில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை உணர்ந்தே பாதுகாக்க வேண்டும். ஆனால் உச்சநீதிமன்றத்தின் அறி வுறுத்தல்களை ஒன்றிய அரசு சட்ட சீர்திருத்தங்களின் மூலம் ஏற்கா மல் பின்வாங்கியது. தேர்தல் ஆணையத்திற்குச் சில வரையறுக் கப்பட்ட அதிகாரங்கள் உள்ள பொழுதிலும் இவிஎம் வாக்குப் பதிவு இயந்திரங்களின் இறக்குமதி மற்றும் பராமரிப்பை ஒன்றிய அரசு நிறுவனங்களே செய்து வரு கின்றன.

மகாராஷ்டிரா :  65 லட்சம் வாக்குகள்

மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ஆம் தேதி மாலை 5 மணிக்கு 58.22% வாக்குகள் பதிவாகி இருந் தது. ஆனால் இரவு 11.30 மணிக்கு மொத்த வாக்குப்பதிவு 65.02% ஆக உயர்ந்தது. வாக்குகளை எண்ணும் நாளில் 66.05% வாக்குகள் பதிவாகி இருந்தது. இது வாக்குப்பதிவில் மொத்தம் 7.83% உயர்வாகும். மாலை 5 மணி வரை 58.22% வாக்குகள் பதிவு செய்யப்பட்டால், 5,64,88,024 வாக்காளர்கள் (5.64 கோடி) வாக்க ளித்துள்ளனர். இரவு 11.30 வரை இது 65.02% ஆக உயர்ந்தால், 6,30,85,732 வாக்காளர்கள் (6.30 கோடி) வாக்களித்துள்ளனர். மாலை 5 முதல் இரவு 11.30 வரை, மொத்தம் 65,97,708 வாக்குகள் (65 லட்சம்) கூடுதலாக பதிவாகி யுள்ளது. அதே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் 9,99,359 வாக்குகள் (9 லட்சம்) கூடுதலாக பதிவாகியுள்ளது. 

ஆனால் மாலை 5 மணிக்கு மேல் 76 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர் என்றும், இதனை நம்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறுகிறது.

ஜார்க்கண்டிலும்...

மகாராஷ்டிரா போல ஜார்க் கண்ட் சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவிலும் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. ஜார்க்கண்ட் முதல் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணிக்கு 64.86% வாக்கு கள் பதிவாகி இருந்தன. ஆனால் இரவு 11.30 மணிக்குள் 66.48% வாக்குகள் பதிவாகி இருந்தது. இது 1.79% உயர்வு ஆகும். அதே போல இரண்டாம் கட்டத்தில் மாலை 5 மணிக்கு 67.59% இருந்தது. இரவு 11.30 மணிக்குள் 68.45% வாக்குகளாக உயர்ந்தது (0.86% உயர்வு). 

முதல் கட்டத்தில் 1.79% உயர்வில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 43 இடங்களில் 17 இடங்களில் வெற்றி கண்டது. ஆனால், இரண்டாம் கட்டத்தில் 0.86% உயர்வில் தேசிய ஜனநாயக கூட்டணி 30 இடங்க ளில் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. வாக்குப் பதிவு உயர்விலும், பாஜக கைப்பற்றும் இடங்களின் எண்ணிக்கையிலும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

ஹரியானாவில் 6.7%...

சமீபத்தில் நடைபெற்ற ஹரி யானா சட்டமன்ற தேர்தல்களிலும் இதே நிலைதான் காணப்பட்டது. ஹரியானாவில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு வாக்கு சதவீதம் 6.7 ஆக அதிகரித்தது. 

இந்த தேர்தலில் பாஜகவின் வெற்றி ஆச்சரியப்படத்தக்கதாக அமைந்தது. இதற்கு தேர்தல் ஆணையம் என்ன விளக்கம் அளிக்கிறது என்பதை நான் அறிய விரும்புகிறேன்” என கடிதத் தில் சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ் குறிப்பிட்டுள்ளார்.