மத்திய பிரதேசத்தில் கால் சட்டையில் இருந்த சேற்றை துடைக்கச் சொல்லி பெண்காவலர் ஒருவர் இளைஞரை அடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் காவலர் ஒருவர் அவரது கால் சட்டையில் இருந்த சேற்றை துடைக்கச்சொல்லி இளைஞர் ஒருவரை அடித்த காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அம்மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், பெண்காவலர் ஒருவர் இளைஞரை அடிக்கும் வீடியோவைப் பார்த்தேன். இதில் சம்பந்தப்பட்ட இளைஞர் அந்த காவலர் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.